நாமக்கல்: நகர இளைஞர், இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் கொசவம்பட்டி ஏரியை, உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கு பூங்கா, படகு சவாரி உள்ளிட்ட வசதிகள் கூடிய சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, ஏரியை தூர் வாருவதற்கு, நிதி வழங்கும்படி, தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிதி கிடைக்கப்பெற்றதும், விரைவில் பணி மேற்கோள்ளப்படும். ஜேடர்பாளையம் கூட்டு குடிநீர் திட்டப்பணி முடியும் நிலையில் உள்ளது. அப்பணி முடிந்ததும், விரைவில், நகராட்சி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோரின் முயற்சியால், சிறந்த மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது. இவ்வாறு, அவர் பேசினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE