குமாரபாளையம்: குமாரபாளையத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு நடந்தன. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். நான்கு வார்டுகளில், 200க்கும் மேற்பட்ட மனுக்களை அமைச்சர் தங்கமணி பெற்றார். 20 பயனாளிகளுக்கு, உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து நடந்த விழாவில், 23 சுய உதவிக்குழுக்களுக்கும், நான்கு சாலையோர வியாபாரிகளுக்கும் கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, 94 பயனாளிகளுக்கு மானிய விலையில் டூவீலர்கள் பெறுவதற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார். அமைச்சர் தங்கமணி பேசியதாவது: மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களை, 98.4 சதவீதம் தொகை திருப்பி செலுத்தி, நாமக்கல் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு, 565 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட, 40 சதவீதம் அதிகம். மானிய விலையில் டூவீலர்கள் பெறுவதில், நாமக்கல் முதலிடம் பிடித்துள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு, 2,500 என இலக்கு நிர்ணயம் செய்த நிலையில், நாமக்கல் மாவட்டம் சார்பில் கோரிக்கை மனுக்கள் அதிகம் வந்ததால், 5,000 டூவீலர்கள் வழங்க அனுமதி கேட்டோம். அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. வரும் ஆண்டிற்கு, 6,000 வாகனங்கள் தர ஆர்டர் கேட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். ஆர்.டி.ஓ., மணிராஜ், தாசில்தார் தங்கம், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE