நியூயார்க்:''பருவநிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்ள இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளன,'' என, ஐ.நா., துணைப் பொதுச் செயலர் அமினா முகமது குறிப்பிட்டுள்ளார்.
பருவநிலை மாறுபாடு தொடர்பாக, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த கருத்தரங்கில், ஐ.நா., துணைப் பொதுச் செயலர் அமினா முகமது பேசியதாவது:பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுப்பதாக, பல நாடுகள் கூறியுள்ளன; இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.சூரிய மின்சக்தி மற்றும் தொழில்சாலைகளின் செயல்பாடுகளில் மாற்றம் என, இந்தியா முன்னோடியாக உள்ளது. அதனால், பருவநிலை மாறுபாடு பிரச்னையில் நமக்குள்ள இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
வறுமையில் 100 கோடி பேர்
ஐ.நா., வளர்ச்சி திட்டம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவல், நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், புதிதாக, 20.7 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்படுவர். அதனால், வரும், 2030ல் 100 கோடி பேர் வறுமையில் இருப்பர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE