சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை தொடர்ந்து வருகிறது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை தொடர்ந்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், போரூர் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதேபோல, சிதம்பரம், திருச்சி, கும்பகோணம், சிவகங்கை, பரமக்குடி, மயிலாடுதுறையில் மிதமான மழை பதிவாகியுள்ளது. கடலூரில் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேலாக அதி தீவிர கனமழை பெய்தது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிக்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் 16 செ.மீ., வைப்பாறில் 12.1 செ.மீ., கடம்பூரில் 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால், சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE