அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊழல் கட்சி அதிமுக.,வா? திமுக.,வா?; ஆ.ராசா, ராஜேந்திர பாலாஜி ‛டிஷ்யூம் டிஷ்யூம்'

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (117)
Share
Advertisement
சென்னை: ஊழல் கட்சி அதிமுக.,வா, திமுக.,வா என்பது குறித்து திமுக., துணைபொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ராசாவுடன் விவாதத்திற்கு தயாராக உள்ளதாக ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.சேலத்தில் நடந்த பொதுநிகழ்ச்சிக்கு பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மிகப்
ஊழல்_கட்சி, ஆ_ராசா, ராஜேந்திர_பாலாஜி, திமுக, அதிமுக, ஜோதி, ஜெயலலிதா, வழக்கறிஞர்

சென்னை: ஊழல் கட்சி அதிமுக.,வா, திமுக.,வா என்பது குறித்து திமுக., துணைபொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ராசாவுடன் விவாதத்திற்கு தயாராக உள்ளதாக ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த பொதுநிகழ்ச்சிக்கு பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மிகப் பெரிய ஊழல். தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு பெரியது. ரூ.1.76 ஆயிரம் கோடி அளவில் கொள்ளையடித்த கட்சி தி.மு.க. அவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் ரூ.1.76 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்தார்கள். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த போது இந்த ஊழல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியே இதில் நடவடிக்கை எடுத்தது. இவர்கள் தற்போது அ.தி.மு.க அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள்,' எனக் கூறியிருந்தார்.


latest tamil newsஇதனையடுத்து செய்தியாளர்களிடம் திமுக., துணைபொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதாவது: ஊழல் குற்றச்சாட்டில் திமுக.,வில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. முதல்வர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல. திமுக விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷனில் குறிப்பிட்டிருப்பதாக அவரது கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.


latest tamil news


Advertisement

ஆனால் 2ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் நாளையோ, நாளை மறுநாளோ கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2ஜி, சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க அவர் தயாரா?. ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன என்பதை விவாதிக்க தயாரா?. இவ்வாறு முதல்வருக்கு சொடுக்குப்போட்டு சவால் விடுத்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச.,5) மீண்டும் செய்தியாளர்களிடம் ஆ.ராசா பேசுகையில், ‛மூணு நாளுல என்னை கூப்பிடுங்கன்னு சொன்னேன். முதல்வர் ஏன் என்னை கூப்பிடல. 2ஜியில் ஊழல், சர்க்காரியாவில் ஊழல், என்று என்னைக்கேட்டது யாரு?. நீதானே சொன்ன.. முதல்வர் நீதான சொன்ன.. திமுக ஊழல் பண்ணல உங்க ஆத்தாதான் ஊழல் பண்ணி ஜெயிலுக்கு போச்சுன்னு சொன்னேன். அரசியல் சட்டத்தை படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி.


latest tamil newsகொள்ளையடிக்கணும் என்பதற்காகவே சசிகலா, திவாகரன், இளவரசியை தன் வீட்டுக்கு அழைத்துவந்து, புதிய புதிய போலி செல்போன் கம்பெனிகளை உருவாக்கி, அந்த கம்பெனிகளின் வாயிலாக பல நூறு கோடி ரூபாயை கொள்ளையடித்தவர் ஜெயலலிதா. அரசியலில் அவர் இருந்தது அசிங்கம். அப்படி நான் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அந்த ஆத்தா (ஜெயலலிதா) படத்தை தூக்கிக்கொண்டு திரிந்தால் என்ன அர்த்தம். ஆத்தா மாதிரியே ஊழல் பண்ணுவேன். ஆத்தா மாதிரியே ஊழல் பண்ணுவேன்னு அர்த்தமா?,' என்று கேட்டார்.

இதுபோன்ற வார்த்தைகளால் தரம்தாழ்ந்து ராசா பேசியுள்ளது பல தரப்பிலும், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசாவுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது: முதல்வர் பழனிசாமியை பற்றி பேச ராசாவிடம் என்ன தகுதி இருக்கிறது. 2ஜியில் ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளைப்போனது உண்மையா இல்லையா?. அதில் கொள்ளையடித்த முக்கால்வாசி பணத்தை பதுக்கி வைத்துள்ளதால் தான் ராசாவை ஸ்டாலின் கூடவே வைத்துள்ளார்.


latest tamil newsவிவாதத்திற்கு தயார்

வருமானவரித்துறை பிரச்னை, அமலாக்கத்துறை பிரச்னை வரும் என்பதற்காக பதுக்கி வைத்துள்ளார். ஊழலின் மொத்த உருவமான கட்சி திமுக., அதிமுக தலைவி ஜெயலலிதா குறித்து பேச ஸ்டாலினுக்கோ, ராசாவுக்கோ, யாருக்கும் உரிமையில்லை. விவாதத்திற்கு முதல்வரை ஏன் கூப்பிடுகிறார், நான் வருகிறேன். எங்கே வந்து விவாதம் நடத்துவது? ஸ்டாலினிடம் கேட்கவா?, ராசாவிடம் கேட்கவா?.. ஊழல் பண்ணுகிறீர்களா இல்லையா?.

சர்க்காரியா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட கட்சி தானே திமுக., விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷன் தீர்ப்பு வழங்கப்பட்ட கட்சி தானே திமுக., ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தானே திமுக., ஆட்சி. உண்மையா இல்லையா. பழனிசாமி அரசு மீதான பொறாமை காரணமாக எப்படியாவது மக்களிடம் பொய்யை சொல்லி ஆட்சியை அகற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் அவதூறுகளை வீசுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


ஜெ., வழக்கறிஞர்


latest tamil news


இந்நிலையில், ஜெயலலிதா வழக்கறிஞரான ஜோதியும் ராசாவுடன் விவாதிக்க தயாரென கூறியுள்ளார். அவர் கூறியதாவது: ஆ.ராசா பேசிய விவகாரத்தில் எனக்கு வருத்தம். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெ., அரசியலமைப்பு சட்டத்தை மீறியவர், கொள்ளைக்காரி என நீதிமன்றம் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பிரிவு 394ன் கீழ் ஜெ., குற்றமற்றவர். ராசா 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது போலவே ஜெயலலிதாவும் வழக்கில் இருந்து விடுதலையாகி விட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி திமுக எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசி வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க நான் தயார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-டிச-202010:15:17 IST Report Abuse
Malick Raja ராசேந்திரபாலாசி பதவியை தக்கவைக்க கண்டதையெல்லாம் பேசிவருவது அவரின் இயல்பை குறிக்கிறது. மானம் போய் உயிர்க்காவலா ? என்ற கேள்விக்கு உட்பட்டுள்ளார் .
Rate this:
Cancel
Nepolian s -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-202005:22:23 IST Report Abuse
Nepolian s எப்படியும் சுடலை கம்பெனி ஆட்சிதான் வரப்போகிறது ...
Rate this:
skandh - Chennai,இந்தியா
08-டிச-202009:56:36 IST Report Abuse
skandhசுடலை என்ன ? இந்த ஜென்மத்துக்கு தீமுக ஆட்சி கட்டாயம் கிடையாது....
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202005:06:32 IST Report Abuse
Mani . V இதெல்லென்ன சந்தேகம்? நீங்கள் இருவருமே ஊழல் கட்சிகள்தான். எல்லாம் தமிழர்களின் தலையெழுத்து.
Rate this:
skandh - Chennai,இந்தியா
08-டிச-202009:58:58 IST Report Abuse
skandhஅப்படின்னா தீமுக ஊழல் கட்சி தானா அப்படி சொல்லுங்க. அப்படி போடுங்க. அப்படின்னா,நீங்களே எங்கள் தலைவர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X