துாத்துக்குடி : சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாயை கொலை செய்த மகன்கள் முத்துராஜ் 37, செல்வகுமார் 35, கைது செய்யப்பட்டனர்.
துாத்துக்குடி ஸ்பிக்நகர் தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் மாயபெருமாள் 60, மனைவி ஞானகனி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. மாயபெருமாள் பெயரில் உள்ள 4 வீடுகளில் மகன்கள் முத்துராஜ் 37, செல்வகுமார் 35 வசித்து வந்தனர்.வீடுகளை தங்களது பெயருக்கு எழுதி தரும்படி கேட்டனர். அதற்கு தாயார் ஞானகனி எதிர்ப்பு தெரிவித்தார். இருவரும் மறைந்த பிறகு சொத்தை பிரித்து கொள்ளுங்கள் என கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், ஞானகனியை கம்பியால் தாக்கினார். காயமுற்ற ஞானகனி மருத்துவமனையில் குணமடைந்த நிலையில் அவர்களது தொல்லையால் வீட்டில் மண்ணெண்ணெய் குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். மகன்கள் இருவரையும் கொலை வழக்கில் முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE