அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் 'பி' டீமா?: கொதிக்கும் கமல்

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (61)
Share
Advertisement
சென்னை: அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கியதில் இருந்தே, அது பா.ஜ.,வின் 'பி' என அதிமுக உள்ளிட்ட கட்சியினர் விமர்சனத்தை முன்வைத்தனர். இதனை மறுத்த அக்கட்சி, பா.ஜ., எதிர்த்தும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு,
MNM, KamalHaasan, BTeam, Sanghi, Twit, மக்கள் நீதி மையம், மக்கள் நீதி மய்யம், கமல், கமல்ஹாசன், பி டீம், சங்கி

சென்னை: அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கியதில் இருந்தே, அது பா.ஜ.,வின் 'பி' என அதிமுக உள்ளிட்ட கட்சியினர் விமர்சனத்தை முன்வைத்தனர். இதனை மறுத்த அக்கட்சி, பா.ஜ., எதிர்த்தும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, பா.ஜ.,வை விட கூடுதல் ஓட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் பி டீம் என்னும் விமர்சனம் குறித்து கமல் கருத்து தெரிவித்துள்ளார்.


latest tamil news



கமல் டுவீட்: அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Manama,பஹ்ரைன்
08-டிச-202007:41:02 IST Report Abuse
Nathan ரஜினியுடன் கமல் இணைந்தால்..இரு கழகங்கங்களும் கிழித்து தொங்க விடப்படும் ...இணைந்த கரங்கள் வெல்லும்.
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
08-டிச-202014:52:39 IST Report Abuse
ShivRam ShivShyamஆன்மீகத்துடன், நாத்திகம் என்ற போர்வையில் ஹிந்துக்களை ஏளனம் செய்து கிருத்துவம் பரப்புபவனும் சேர்த்தால் சந்தனத்தில் சாக்கடை கலந்தது போல் .. ரஜினியின் ஹிந்து ஆதரவாளர்கள் ஒருவர் கூட அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-202007:13:34 IST Report Abuse
Bhaskaran அறத்தை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு கட்டிய மனைவியுடன் வாழ முடியாதவன் இந்த ஆள் .சேர்ந்து வாழ்ந்த கவுதமி பாதுகாப்பு கருதி இவனை விட்டு சென்றது பற்றி உலகத்துக்கே தெரியும்
Rate this:
M.Selvam - Chennai/India,இந்தியா
08-டிச-202014:05:13 IST Report Abuse
M.Selvamஇப்போ நாட்டை ஆள்பவர்கள் முன்னாள் நாட்டை ஆண்டவர்கள் மாநிலத்தை ஆண்டவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் அல்லவா ?...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202004:44:33 IST Report Abuse
Mani . V ஏய்யா அவரு சமூகச் சீர்கேடான மிகப் பெரிய ஒரு கேவலமான நிகழ்ச்சியை நடத்துகிறார். அவரை போய் பி டீம் என்று சொல்கிறீர்கள். அவர் மனது எவ்வளவு வேதனைப்படும்? நீங்க அந்த வேலையை சிறப்பா செய்யுங்க தலைவரே வெட்கப்படவே வேண்டாம். (இதெல்லாம் ஒரு பிழைப்பு)
Rate this:
M.Selvam - Chennai/India,இந்தியா
08-டிச-202014:09:07 IST Report Abuse
M.Selvamநீங்கள் அந்த நிகழ்ச்சியை உற்றுப் பார்க்காமல் இது சொல்ல முடியாது.. அது போல சினிமா சீரியல் யூ டியூப் வாட்ஸாப்ப் இன்டர்நெட் அனைத்தியதையும் பார்ப்பதை நிறுத்தி விட்டு இங்கே வந்து உபதேசம் பண்ணலாம் ... (நம்ம ஊரு ஆட்கள் தான் பலான விஷயங்களை விழுந்து விழுந்து மறைவாக ரகசியமாக நெட் மற்றும் ஊடக வாயிலாக பார்க்கும் தகவல் தெறியுமா??)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X