நான் பி டீமா?: கொதிக்கும் கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் 'பி' டீமா?: கொதிக்கும் கமல்

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (61)
Share
சென்னை: அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கியதில் இருந்தே, அது பா.ஜ.,வின் 'பி' என அதிமுக உள்ளிட்ட கட்சியினர் விமர்சனத்தை முன்வைத்தனர். இதனை மறுத்த அக்கட்சி, பா.ஜ., எதிர்த்தும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு,
MNM, KamalHaasan, BTeam, Sanghi, Twit, மக்கள் நீதி மையம், மக்கள் நீதி மய்யம், கமல், கமல்ஹாசன், பி டீம், சங்கி

சென்னை: அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கியதில் இருந்தே, அது பா.ஜ.,வின் 'பி' என அதிமுக உள்ளிட்ட கட்சியினர் விமர்சனத்தை முன்வைத்தனர். இதனை மறுத்த அக்கட்சி, பா.ஜ., எதிர்த்தும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, பா.ஜ.,வை விட கூடுதல் ஓட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் பி டீம் என்னும் விமர்சனம் குறித்து கமல் கருத்து தெரிவித்துள்ளார்.


latest tamil news



கமல் டுவீட்: அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X