புதுடில்லி: டில்லியின் எல்லைப் பகுதியான சிங்குவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆய்வு செய்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டிசம்பர் 8ம் தேதி விவசாயிகள் அறிவித்திருக்கும் நாடு தழுவிய போராட்டத்துக்கு பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. டில்லியில் ஆம் ஆத்மி கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இந்நிலையில், போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு டில்லி அரசு செய்து கொடுத்திருக்கும் அடிப்படை வசதிகளை முதல்வர் கெஜ்ரிவால் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இது குறித்து கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லியில் உள்ள மைதானங்களை, விவசாயிகளை அடைத்து வைக்கப் பயன்படுத்தும் சிறைகளாக மாற்ற அனுமதி தரும்படி எங்களுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், விவசாயிகளுக்கு எந்த கஷ்டமும் ஏற்படக்கூடாது என்பதில் எங்கள் கட்சி எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் உறுதியாக உள்ளோம்.
இங்கு நான் ஒரு முதல்வராக வரவில்லை. அவர்களுக்கு உதவி செய்யும் ஒரு சேவகராகவே வந்துள்ளேன். விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து உதவி செய்ய வேண்டியது நமது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE