வேளாண் சட்டங்களை வாபஸ் பெறவில்லை எனில் பதவி விலகுங்கள்: மம்தா

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
மிட்னாப்பூர்: வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ., அரசு வாபஸ் பெறவேண்டும் இல்லையெனில் பதவி விலக வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்க சட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளநிலையில் அரசியல் கட்சியினர் இப்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில்,
BJP_Govt, Withdraw, FarmLaws, or, Quit, MamataBanerjee, West Midnapore Rally, பாஜக, வேளாண் சட்டங்கள், வாபஸ், பதவி, விலக வேண்டும், மம்தா பானர்ஜி, மேற்குவங்கம், முதல்வர்

மிட்னாப்பூர்: வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ., அரசு வாபஸ் பெறவேண்டும் இல்லையெனில் பதவி விலக வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்க சட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளநிலையில் அரசியல் கட்சியினர் இப்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மேற்கு மிட்னாபூரில் நடைபெற்ற பேரணியில் மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.


latest tamil news



தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: பா.ஜ., அரசின் அராஜகப் போக்கை தட்டிக் கேட்காமல் மவுனமாக இருப்பதைவிட, கைதாகி சிறை செல்வதே மேல். மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, உடனடியாக புதியதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும். இல்லையென்றால் பதவி விலக வேண்டும். விவசாயிகளின் உரிமைகளை தியாகம் செய்துவிட்டு, பா.ஜ., பதவியில் நீடிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suhail - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-டிச-202012:43:05 IST Report Abuse
Suhail தொல்லை தாங்க முடியலயப்பா ...வேற வேலயே இல்லையா போங்கப்பா போய் பிள்ளைகளை படிக்க வைங்கப்பா
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
08-டிச-202011:59:48 IST Report Abuse
Srinivas பஞ்சாப் விவசாயிகள் எதற்காகவும் பணியாமல் துணிந்து நின்று போராடி இந்தியா முழுவதும் அவர்களின் போராட்டம் விரிவடைந்துள்ளது.
Rate this:
Cancel
08-டிச-202008:19:45 IST Report Abuse
சம்பத் குமார் 1).மம்தா மேடம் அவர்களே, இறைவன் மற்றும் மக்கள் கருணையால் தாங்கள் இப்பதவியில் உள்ளீர்கள் என்பதை அடிக்கடி மறந்து விட்டீர்களா. 2). கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு வங்காளம் முதல்வராக உள்ள தாங்கள் தங்களது மாநிலத்தை எவ்வாறு முன்னேற்றி உள்ளீர்கள் என்பதை முதலில் சுயபரிசோதனை செய்து பாருங்கள்.3). திறமையான கட்டுக்கோப்பான மக்களை கொண்ட மாநிலம் மேற்கு வங்க மாநிலம்.4). இந்திய மாநிலங்களில் நல்ல முன்னேற்றமான டாப் 5 பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு வங்க மாநிலம் கிடையாது. முதலில் தாங்கள் அதற்கு முயற்சிக்க வேண்டும். பிறகு அடுத்தவர்கள் பதவி விலகலாம்.5). மக்கள் கொடுத்த இப்பதவியை விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லோரையும் சமமாக பாவித்து ஐனநாயக முறையில் போலீஸ் நிர்வாகத்தை திறம்பட நடத்தி மக்கள் மனதில் நிலைத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி ஜயா.
Rate this:
Suhail - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-டிச-202012:53:36 IST Report Abuse
Suhailமம்தாஜிய விடுங்க பாஸ் , விவசாய சட்டங்கள் யாருக்கு பலன் தரும்னு சொல்ரீங்க? சரி அந்த விவசாயிங்களே போராடும்போது அந்த சட்டத்தை வாபஸ் வாங்க மறுப்பது யாருக்காக?...
Rate this:
visu - Pondicherry,இந்தியா
08-டிச-202013:35:33 IST Report Abuse
visuஎந்த விவசாயீ போராடுகிறார் ? காங்கிரெஸ்ஸால் தூண்டி விடப்பட்டவர் தானே .ஒரு சட்டத்தில் பிரச்சினை என்றால் அது என்ன என்று விவாதித்து அதை நிவர்த்தி செய்யமால் சட்டம் திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே வைப்பது அரசியலாக தான் தெரிகிறது . இதெற்கு முன் வெங்காயம் சென்னையில் 40. ரூபாய் விற்றபோது நாசிக்கில் விவசாயீ 1.50. ரூபாய்க்கு விற்றார் எனக்கு நட்டம் என்று அதை பிரதமர் நிதிக்கு அனுப்பினார் அப்போது எந்த சட்டம் அந்த விவசாயியை காத்து து . இப்போது அவர் அங்கே விலை 1.50. என்றல் தமிழ் நாட்டில் 30. ரூபாய்க்கு கூட விற்கலாம் .இடை தரகர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் ஆகவே அவர்களி ஒழிக்க கொண்டுவரப்பட்ட சட்டம் இது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X