குளிர்ச்சியான கடல்
ஐந்து பெருங்கடல்களில் சிறியது ஆர்க்டிக் கடல். மற்ற கடல்களை விட இது மிக குளிர்ச்சியானது. பூமியின் வட துருவத்தை சுற்றி அமைந்துள்ளது. இக்கடல் குளிர்காலத்தில் முழுவதுமாகவும், மற்ற காலங்களில் பாதியளவும் பனிக்கட்டியால் உறைந்திருக்கும். இதன் பரப்பளவு 1.40 கோடி சதுர கி.மீ. இதன் கடற்கரையின் நீளம் 45,390 கி.மீ. ஜெல்லி மீன், திமிங்கலம், சீல், வால்ரசஸ் உட்பட பல உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இக்கடலின் பெரும்பாலான பகுதிகள் ஆழம் குறைவானவை. சர்வதேச நீரியல் ஆணையம் இதனை பெருங்கடல் என பகுப்பாய்வு செய்துள்ளது.
தகவல் சுரங்கம்
முதல் பிரதமர்
இந்தியாவின் நான்காவது பிரதமராக பதவி வகித்தவர் மொரார்ஜி தேசாய். காங்., கட்சியை சாராத முதல் பிரதமர். ஜனதா கட்சி சார்பில் 1977 மார்ச் 24ல் பிரதமரான இவர், 1979 ஜூலை 28ல் ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர் இவரே. மும்பை மாகாண முதல்வர், நாட்டின் இரண்டாவது துணை பிரதமர், மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சர் உள்ளிட்ட பல உயர் பதவிகளை வகித்தவர். இவர் தான் அதிக வயதில் (84) இந்தியாவின் பிரதமரானவர். நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது பெற்றுள்ளார். இவர் பாகிஸ்தானின் உயரிய 'நிசான் இ பாக்.,' விருதை வென்ற ஒரே இந்தியர் ஆவார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE