எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சர்ச்சைக்குரிய கடல் பகுதிகளில் ஒன்று தென் சீன கடல் பகுதி. இதில் அவ்வப்போது சீனா போர் பயிற்சியில் ஈடுபடும். மேலும் இங்கு உள்ள சீனாவுக்கு சொந்தமான சிறிய தீவுகளில் ராணுவ தளவாடங்களை அமைத்துள்ளது சீனா. 3.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கடற்பரப்பில் நீர்மூழ்கி போர்க் கப்பல்களையும் சீனா பயன்படுத்தி வருகிறது.

இதனால் அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியாவுடன் போர் அபாயம் ஏற்பட்டு விடும் என்று அந்த நாட்டு தலைவர்கள் அச்சப்படுகின்றனர். ஆனால் சீனாவின் இந்த நடவடிக்கைகளால் அண்டை நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படுவது வாய்ப்பில்லை என்றும் தற்காப்புக்காகவே சீனா தென்சீனக்கடலை பயன்படுத்தி வருகிறது என்றும் நேவல் அண்ட் மெர்ச்சன்ட் ஷிப் என்கிற சீன அரசு இதழில் செய்தி வெளியாகி உள்ளது.
முன்னதாக சீனா-தைவான் கடல் பரப்பில் இரு நாட்டு கப்பல் படைகளுக்கு இடையே சிறிய போர் மூண்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தென் கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ கூட்டுப் பயிற்சி மேற்கொண்டது. இது சீனாவை ஆத்திரமூட்டியது.
இதனாலேயே தென் சீன கடல் பகுதியில் சீன கம்யூனிச அரசு ராணுவ பயிற்சிகளை மேற்கொள்கிறது என்று கூறப்படுகிறது.
தென்சீனக் கடற்பரப்பில் சீனா உருவாக்கிய செயற்கை தீவுகளில் ராணுவ போர் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டுமுதலே இப்பகுதியில் தொடர்ந்து இந்த பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேஷியா, புரூனே, தைவான் உள்ளிட்ட நாடுகளை இந்த பயிற்சி அச்சுறுத்தியது.

சர்வதேச வர்த்தகத்தில் தென் சீன கடல் பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது. பல நாடுகளுக்கு சொந்தமான சர்வதேச கடற்பரப்பில் சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா முன்னதாக குற்றஞ்சாட்டியது. வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கு சீனாவின் இந்த பயிற்சிகள் இடையூறாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தென் சீனக் கடல் பரப்பு முழுவதையும் சொந்தம் கொண்டாட சீனா முயல்கிறது என்று இதர ஆசிய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE