எட்டு வழி சாலை திட்டம் :உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Updated : டிச 08, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி : சென்னை -- சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.சென்னை - சேலம் இடையே சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின், 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எட்டு வழிச்சாலை அமைக்க, மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டன. இந்த எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக, சேலம், தர்மபுரி,
 சேலம், சென்னை,  8 வழிச்சாலை, வழக்கு, உச்சநீதிமன்றம், நாளை , தீர்ப்பு

புதுடில்லி : சென்னை -- சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.சென்னை - சேலம் இடையே சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின், 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எட்டு வழிச்சாலை அமைக்க, மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டன.


latest tamil news


இந்த எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக, சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதற்கு, விவசாயிகள், சமூக ஆர்வர்லர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க கோரி, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, கடந்த, 2019-ல் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, சாலை திட்ட இயக்குனர் மற்றும் தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நடந்தது. கடந்த அக்டோபரில், வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், 'மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை எதிர்மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.இந்நிலையில், எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.


Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A NATARAJAN - NEW DELHI,இந்தியா
08-டிச-202013:37:17 IST Report Abuse
A NATARAJAN என்ன நடக்குது ... எல்லாம் அந்த பரமாத்மாவுக்கே வெளிச்சம்....
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
08-டிச-202011:42:29 IST Report Abuse
மன்னிப்பு அது சரிங்க ஐயாக்களா , மதுரை விமான நிலையத்துக்கு விவசாய நிலம் ,வீடு எல்லாம் எடுத்து அதுக்கு குறைந்த விலைதான் கொடுக்கப்படுகிறது. எட்டு வழிசாலைக்கு பொங்குறவங்கள் எல்லாம் , இதுக்கு ஏன் பொங்கவில்லை. ஏன் விமானத்துல விவசாயிகள் தான் போகப்போகிறார்களா? இதுக்கும் கொஞ்சம் பொங்குங்களேன். பணம் வாங்க வேண்டி , கலெக்டர் ஆபீஸ், தாசில்தார் ஆபீஸ் ,கோர்ட்டுக்கு எங்க போனாலும் அரசு இவ்வளவுதான் கொடுக்கும் வாங்கிட்டு போங்கனு தான் சொல்லுராங்க ஐயாமார்களே.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
08-டிச-202011:24:01 IST Report Abuse
GMM 8 வழி சாலைக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல். வாகனம் அதிகரிக்க சாலை வசதி தேவைப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டும் இரு, நான்கு சக்கர வாகனம் வாங்கலாம் என்றால், சாலை தேவை குறையும். விவசாய நிலங்கள் என்பது , எத்தனை ஆண்டுகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்று இருக்க வேண்டும். சாலை வசதி இல்லாமல் விவசாய உற்பத்தி பொருளை நேரத்தில் பயன்படுத்த முடியாது. சுய நல வழக்கு.
Rate this:
Naresh Giridhar - Chennai,இந்தியா
08-டிச-202013:08:16 IST Report Abuse
Naresh Giridharபட்டினி என்றால் என்னவென்று தெரியுமா ?...
Rate this:
Anand - chennai,இந்தியா
08-டிச-202014:57:57 IST Report Abuse
Anand//பட்டினி என்றால் என்னவென்று தெரியுமா ?...// தான் மற்றும் தனது குடும்பம் கொழுத்து வாழ, பொய்யுரைத்து அப்பாவி மக்களை திசைத்திருப்பி எந்த தொழிலையும் செய்யவிடாமல் அட்டூழியம் செய்யும் சமூக விரோத அரசியல் ஒட்டுண்ணிகளின் பின்னால் கேவலம் குவார்ட்டர் ஒரு பிளேட் பிரியாணிக்கு ஆசைப்பட்டு சென்று அல்லோலப்படும் பாமர மக்களிடம் கேட்டுப்பார்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X