உலக சுகாதார நிறுவனத்தின் அறக்கட்டளை வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி நிறுவப்பட உள்ளது. இதற்கு தலைமை நிர்வாகியாக இந்தியரான அனில் சோனி நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஆண்டுகள் மருத்துவத் துறையில் அனுபவம் வாய்ந்த அனில் சோனி, பல அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களில் பணி புரிந்த பணிபுரிந்துள்ளார்.

இந்த அறக்கட்டளை மூலமாக பின்தங்கிய மற்றும் நடுத்தர பொருளாதாரம் கொண்ட நாடுகளுக்கு உதவ உலக சுகாதார நிறுவனத் தலைமை முடிவெடுத்துள்ளது. ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ள இந்த அறக்கட்டளை வரும் 2023-ஆம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது.
அனில் சோனி வியாடிரஸ் எனும் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது எச்ஐவி-க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளார். மேலும் கிளின்டன் ஹெல்த் ஆக்சிஸ் இனிஷியேடிவ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். மலேரியா, டியூபர்குளோஸிஸ் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க இவர் நிதி திரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸின் தொண்டு நிறுவனமான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இவர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE