சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : டிச 07, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தி.மு.க., ஆட்சியில், தமிழ் வழியில் படித்தோருக்கு, தமிழக அரசு பணிகளில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, 2010ல் நிறைவேற்றி, உரிய அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. முதல்வர் நேரில் சென்று, கவர்னரை வலியுறுத்தி, இந்த சட்டத் திருத்தத்திற்கான ஒப்புதலை பெற வேண்டும். காலம் தாழ்த்தி, தி.மு.க., போராட்டத்தை நடத்தும்

'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தி.மு.க., ஆட்சியில், தமிழ் வழியில் படித்தோருக்கு, தமிழக அரசு பணிகளில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, 2010ல் நிறைவேற்றி, உரிய அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. முதல்வர் நேரில் சென்று, கவர்னரை வலியுறுத்தி, இந்த சட்டத் திருத்தத்திற்கான ஒப்புதலை பெற வேண்டும். காலம் தாழ்த்தி, தி.மு.க., போராட்டத்தை நடத்தும் சூழ்நிலையை உருவாக்க வேண்டாம்.

'டவுட்' தனபாலு: தி.மு.க., சுட்டிக்காட்டும் விஷயங்களை, முதல்வர் இ.பி.எஸ்., நிறைவேற்றுகிறார் என்பதற்காக, 10 ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றிய சட்டத்தை, இப்போது அமல்படுத்த நிர்ப்பந்திக்கிறீர்கள்... இதெல்லாம் ரொம்ப ஓவரோ என்பதே, இதை படிக்கும் பலருக்கும், 'டவுட்' ஆக உள்ளது. எனினும், இதையும், தமிழக அரசு செய்து விடும் பாருங்கள்!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுப்பது சமூக நீதிக்கு எதிரானது. தமிழர், தமிழ் மொழி, சமூக நீதி சார்ந்த சட்டங்களை, கவர்னர் முடக்கி வைத்திருப்பது, எந்த வகையிலும் சரியல்ல.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், தமிழகத்தில் சமூக நீதி இருப்பது போலவும், கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால், அந்த சமூக நீதிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பது போலல்லவா இருக்கிறது... நடிகர் வடிவேலு பாணியில், 'எதற்கெடுத்தாலும், கவர்னருடன் மோதுவதே, தமிழக கட்சிகளின் வழக்கமாக போய் விட்டதோ...' என்ற, 'டவுட்' கிளம்புது!


இந்திய கம்யூ., தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன்:
ரஜினி கட்சியின் கொள்கை, லட்சியம், எண்ணங்கள் குறித்து எதுவும் தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், கட்சி ஆரம்பிக்கிறார். தேர்தல் நேரத்தில் அவருடைய அரசியல் என்பது, மத சார்பற்ற அரசியலுக்கு பயன்படுமா, என்ற சந்தேகம் உள்ளது.

'டவுட்' தனபாலு: கம்யூ.,க்களுக்கும் கொள்கை இருக்குது என்கிறீர்கள்; மக்கள் தான் அதை அறிவரா... மேலும், கம்யூ.,க்களுக்குள் மார்க்சிஸ்டுகளுக்கும், இந்திய கம்யூ.,க் களுக்கும் என்ன வித்தியாசம் என்பதும், நீண்ட காலமாக இருக்கும், 'டவுட்!' இந்த டவுட்டுகளே விலகாத போது, ரஜினி மீது நீங்கள் டவுட் கொள்வது சரிதானா?


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
08-டிச-202020:08:39 IST Report Abuse
Madhusoodhana Ramachandran நம் நாட்டிற்கு தற்கால கம்யூஸிட்ட்டுகள் வேஸ்ட். நாட்டு பற்று அற்றவர்கள். கூசாமல் பொய் பேசுபவர்கள். நல்ல நிலையில் இயங்கும் தொழிலகங்களை மூடு விழா செய்பவர்கள். முன்பெல்லாம் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் வைக்க பட்டன. தொழிலாளிகள் தவறு செய்து தண்டனை வழங்க பட்டாள் தொழிலாளர்களையும் கண்டிப்பார்கள். யுபோது ஒரு தலைப்பட்சமாக நடக்கிறார்கள். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நடந்து வந்ததை மறந்து விட்டார்கள் தியாக உணர்வுடனும் நாடு பற்றுடனும் புள்ளி விவரங்களுடன் மக்களவையில் எடுத்து பேசியது போன்று சிறந்த குணங்கள் இப்போது இல்லை.
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
08-டிச-202020:01:26 IST Report Abuse
Madhusoodhana Ramachandran டூப் மாஸ்டர் என்பதை நிரூபிக்கிர்றார்.அப்படியே உங்கள் அப்பா ஆட்சி ஆரம்பத்திலிருந்து எவ்வளவு கப்ஸா லாந்தர் என்று கூறுங்கள். கூட முருட்டி குண்டு ஐயோ என்னை கொள்ள பார்க்கிறார்கள் இன்னும் பல எது ஏமாற்றுதல் காலை வாந்திகளை. பொய் புனைசுருட்டு இன்னும் பலப்பல. வஞ்சம் தீர்ப்பது. விஞ்சகனா ஊழல் . அப்பா அப்பா கைதேர்ந்த தலைவர்.பஞ்சமா பதக்கங்களை கூசாமல் செய்வது.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
08-டிச-202013:58:22 IST Report Abuse
Suppan மத சார்பற்ற அரசியல் என்பதே ஒரு ஏமாற்று வேலை. முஸ்லிம் லீக், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி ஆகியவை மத சாற்பற்ற கட்சிகளோ? இவை தவிர வி சி க, பாம க, கவுண்டர் கட்சி என்று ஜாதிக் கட்சிகள் பல்கிப் பெருகி உள்ளன. இவைகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றும் பெரிய கட்சிகளை என்னவென்று சொல்வது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X