சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தி.மு.க.,வில் உழைக்க ஒரு கூட்டம்; பிழைக்க ஒரு கூட்டம்!

Added : டிச 07, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
தி.மு.க.,வில் உழைக்க ஒரு கூட்டம்; பிழைக்க ஒரு கூட்டம்!''புயல்லயும் ஆதாயம் பார்க்க துடிக்காவ வே...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''நம்ம ஊருல தான், அடுத்தடுத்து ரெண்டு புயல் வந்ததே... எதைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி பஞ்சாயத்துல, தமிழ் பல்கலைக் கழக குடியிருப்பு இருக்கு... 'நிவர்' புயல்

 டீ கடை பெஞ்ச்


தி.மு.க.,வில் உழைக்க ஒரு கூட்டம்; பிழைக்க ஒரு கூட்டம்!''புயல்லயும் ஆதாயம் பார்க்க துடிக்காவ வே...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''நம்ம ஊருல தான், அடுத்தடுத்து ரெண்டு புயல் வந்ததே... எதைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி பஞ்சாயத்துல, தமிழ் பல்கலைக் கழக குடியிருப்பு இருக்கு... 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கையா, இங்கே இருந்த மரக்கிளைகளை வெட்ட, மாவட்ட நிர்வாகம் உத்தரவு போட்டுச்சு வே...

''ஆனா, பஞ்சாயத்து நிர்வாகத்தினரோ, குடியிருப்புல இருந்த, 40 மரங்களையும் அடியோட வெட்டி சாய்ச்சிட்டாவ... அங்கே, பழமையான செம்மரம் ஒண்ணும் இருந்துச்சு வே...

''அதை மட்டும் வெட்டுனா சந்தேகம் வரும்னு, எல்லா மரத்தையும் வெட்டி தள்ளிட்டாவ... இந்த மரங்களை கடத்தி, காசு பார்க்க திட்டம் போட்டிருக்கிறதா, கலெக்டர் வரை புகார் போயிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.

''ஈரோடு ராஜா மறுபடியும், 'என்ட்ரி' தருவார்னு சொல்றா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், குப்பண்ணா.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''ஈரோட்டைச் சேர்ந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெரியசாமியின் மனைவி, போன மாசம் இறந்து போனாங்க... சமீபத்துல, ஈரோடு மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் போன கனிமொழி, கவுந்தப்பாடியில இருக்கற பெரியசாமி ஆத்துக்கு போய், துக்கம் விசாரிச்சாங்க ஓய்...

''ஆத்துக்குள்ள பெரியசாமி, அவரது மகன்கள் ராஜா, சத்யன் மட்டுமே இருந்தா... மற்ற கட்சி நிர்வாகிகள் யாரையும் உள்ளே அனுமதிக்கலை ஓய்... அவாளிடம், கனிமொழி, 20 நிமிஷம் ஆலோசனை நடத்தியிருக்காங்க...

''இதனால, தீவிர அரசியல்ல இருந்து ஒதுங்கி இருக்கற ராஜா, தேர்தல் நேரத்துல, முழுமூச்சா அரசியல் பணிகள்ல களம் இறங்குவார்னு அவரது ஆதரவாளர்கள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''முந்திரிக்கொட்டை பிரசாரத்தால, தி.மு.க., நிர்வாகிகள் அலறுறாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''யாரு வே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற கோஷத்துடன், தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் உதயநிதி, பிரசாரத்தை துவங்கியிருக்காரே...

''அவரது பிரசார நிகழ்ச்சிகளை பிரமாண்டமா நடத்தணும்னு, தலைமையில இருந்து, மாவட்டச் செயலர்களுக்கு உத்தரவு வருது பா...

''அதே நேரம், இதுக்கான செலவுகளை பத்தி, தலைமை மூச்சு கூட விட மாட்டேங்குது... கொரோனா நிவாரணம் துவங்கி, உதயநிதி நிகழ்ச்சி வரை, பல மாவட்டச் செயலர்களும், 1 கோடி ரூபாய் வரை செலவு பண்ணிட்டாங்க பா...

''அதே நேரம், தேர்தல்ல சீட்டாவது கிடைக்குமான்னா, அதுவும் உறுதியில்லை... 'ஐபேக்'ல இருக்கிற வெளி மாநிலத்தினர் தான், வேட்பாளர்களையே தேர்வு செய்யப் போறாங்க... 'உழைக்க ஒரு கூட்டம், பிழைக்க ஒரு கூட்டமா'ன்னு அவங்க புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''அந்தக் கட்சியில மாவட்டத்துக்கு ஒரு குறுநில மன்னர் இருப்பாங்க... மத்தவங்க எல்லாம், சேவகர்கள் தானேங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
08-டிச-202015:56:46 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran migavum taamadamaaga kalattil irangiyirukkiraar Rajni Kanth. I varudaya katchi சர்க்கார் அமைக்க முடியுமா. மேலும் பிஜேபி உடன் கூட்டணி வைத்தால் கூட வோட்டை கிடைப்பது அரிது ஐய.
Rate this:
Cancel
C.ELUMALAI - Chennai,இந்தியா
08-டிச-202012:44:11 IST Report Abuse
C.ELUMALAI பல்லக்கு தூக்கி கள் உழைக்க,பல்லக்கில் அமருவது கட்டுமர வாரிசுகள்.
Rate this:
Cancel
kuppusamy - chennai,இந்தியா
08-டிச-202007:16:49 IST Report Abuse
kuppusamy இரண்டு திராவிட கட்சிகளும் வரவேகூடாது .அனால் மாற்று கட்சிஎதுவும் கண்ணில் படவில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X