'கொரோனா தடுப்பு மருந்துக்கு நீண்ட நாள் காத்திருக்க வேண்டாம்'

Updated : டிச 09, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
லக்னோ :''கொரோனா தடுப்பூசிக்காக, நாம் நீண்டநாள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மிக விரைவிலேயே, தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விடும்,'' என, பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தின், மிக முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் ஆக்ராவில், 'மெட்ரோ' ரயில் சேவையின் முதல்கட்ட பணிகளை,
கொரோனா, தடுப்பு மருந்து, பிரதமர் மோடி

லக்னோ :''கொரோனா தடுப்பூசிக்காக, நாம் நீண்டநாள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மிக விரைவிலேயே, தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விடும்,'' என, பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தின், மிக முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் ஆக்ராவில், 'மெட்ரோ' ரயில் சேவையின் முதல்கட்ட பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடிபேசியதாவது:இன்றைய புதிய இந்தியாவின் கனவு மிகப்பெரியது. கனவு கண்டால் மட்டும் போதாது, அதை நிறைவேற்ற துணிச்சல் வேண்டும். ஈடுபாட்டுடனும், துணிச்சலுடனும் நாம் முன்னேறி செல்ல துவங்கினால், எந்த தடைகளும் நம்மை தடுத்து நிறுத்த முடியாது.கடந்த, 20ம் நுாற்றாண்டில், மெட்ரோ நகரங்கள் அனுபவித்த வசதிகள் அனைத்தையும், ஆக்ரா போன்ற சிறிய நகரங்களும் தற்போது அனுபவித்து வருகின்றன.

கடந்த நுாற்றாண்டுகளின் சட்டங்களை வைத்து, வரும் நுாற்றாண்டுக்கான இந்தியாவை கட்டமைக்க முடியாது. இதனால் தான் தொடர்ந்து, சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
தவறான நோக்கத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்களால், ஒட்டுமொத்த துறைக்கே கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது.

கட்டுமான நிறுவனங்களுக்கும், வீடு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான நம்பிக்கை குறைய துவங்கியுள்ளது. இதை களைவதற்காக தான், 'ரெரா' எனப்படும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய சட்டம் அமல்படுத்தப்பட்டது.அதன் பிறகு, நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடுகள், விரைவில் கட்டி முடிக்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.பிரதமர் வீட்டுவசதி திட்டம், ஆக்ராவில் இருந்து தான் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நகர்ப்புறத்தில் வசிக்கும், ஒரு கோடி ஏழை மக்களுக்கு, வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களை, சமீபத்தில் சந்தித்தேன். தடுப்பூசிக்கு நாம் நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. விரைவிலேயே பயன்பாட்டுக்கு வந்து விடும். ஆனாலும், மக்கள் அஜாக்கிரதையாக இருக்க கூடாது. முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது தொடர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


'இந்தியா மொபைல் மாநாடு'துவக்கி வைக்கிறார் பிரதமர்இந்திய மொபைல் சேவை சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 4வது, 'இந்தியா மொபைல் மாநாடு' டில்லியில் இன்று துவங்குகிறது. இதை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, இந்த மாநாடு நடக்கவுள்ளது.

மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர்ரவிசங்கர் பிரசாத், இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 30 நாடுகளை சேர்ந்த, 210 பேச்சாளர்களும், 150 நிறுவனங்களும், 3,000 பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-டிச-202020:45:17 IST Report Abuse
ஆப்பு //இந்தியாவின் கனவு மிகப் பெரியது// ஆமா 15 லட்சம், 2 கோடி பேருக்கு வேலைன்னு பெரிய பெரிய கனவெல்லாம் காண வெச்சுட்டாங்க. நிறைவேற்றதான் முடியலை. சீக்கிரம் கனவுலேயே 15 லட்சம் போட்டு, வேலைக்கான அப்பாயிண்ட் மெண்ட்டையும் அனுப்பி வையுங்க.
Rate this:
Cancel
DRY -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-202020:24:33 IST Report Abuse
DRY Yes no need any God means include Jesus and Alla as well why Ram only ?
Rate this:
Cancel
08-டிச-202016:55:50 IST Report Abuse
ஆப்பு ஆமா... 18 நாளில் கைதட்டி கொரோனாவை விரட்டிட்டோமே... தளர்வெல்லாம் அறிவிச்சாச்சே.... இன்னும் எதுக்கு தடுப்பூசி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X