அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அறிக்கை நாயகர்' பட்டம்: ஸ்டாலின் ஆவேசம்

Updated : டிச 09, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
சென்னை :''ஆளும்கட்சி தவறுகளை சுட்டிக்காட்டிய எனக்கு, 'அறிக்கை நாயகர்' பட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., தருகிறார். 'ஊழல் நாயகர், கலெக் ஷன் நாயகர், கமிஷன் நாயகர்' என்ற பட்டத்தை, முதல்வருக்கு நான் தருகிறேன்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார். போராட்டம் சென்னை, கொளத்தூர் தொகுதியில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஸ்டாலின் நேற்று
'அறிக்கை நாயகர்' பட்டம்: ஸ்டாலின் ஆவேசம்

சென்னை :''ஆளும்கட்சி தவறுகளை சுட்டிக்காட்டிய எனக்கு, 'அறிக்கை நாயகர்' பட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., தருகிறார். 'ஊழல் நாயகர், கலெக் ஷன் நாயகர், கமிஷன் நாயகர்' என்ற பட்டத்தை, முதல்வருக்கு நான் தருகிறேன்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.


போராட்டம்


சென்னை, கொளத்தூர் தொகுதியில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின், நிருபர்களுக்கு,அவர் அளித்த பேட்டி:வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்; போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தி, கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினோம். சேலத்தில், நான் பங்கேற்றேன்.முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால், போராட்டம் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக, பங்கேற்க வந்தவர்களை, போலீசார் தடுத்து அடைத்து வைத்தனர்.

கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன்.அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துள்ளோம். ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி, நான் அறிக்கை விடுத்தேன்.முதல்வர் எனக்கு, 'அறிக்கை நாயகர்' பட்டம் தருகிறார். 'ஊழல் நாயகர், கலெக் ஷன் நாயகர், கமிஷன் நாயகர்' என்ற பட்டத்தை, முதல்வருக்கு நான் தருகிறேன்.


சிறை தண்டனை'தி.மு.க., கார்ப்பரேட் கட்சி' என, வாய்கூசாமல் முதல்வர் பேசுகிறார். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு, மத்திய அரசு எந்த அளவுக்கு துணை நிற்கிறது; அதற்கு அடிபணிந்து ஆதரிப்பவர், முதல்வர் தான்.லோக்சபா தேர்தலில் போது, எப்படி இருந்ததோ, அப்படித் தான் தி.மு.க., கூட்டணி இருக்கிறது.அதை விட, சிறப்பாக இருக்கிறது. லோக்சபா தேர்தல் வெற்றியை விட, பல மடங்கு வெற்றி பெறுவோம்.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது போடப்பட்ட வழக்கில், தலா நான்கு ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அதை மறந்து விட்டு, ஜெ., விடுதலை ஆனதை பற்றி கூறுகின்றனர்.அதனால், இதையெல்லாம் நிரூபிப்பதற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா சவால் விட்டுள்ளார். ஆனால், இதுவரை முதல்வர் வாய் திறக்கவில்லை.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.


நாடு தழுவிய முழு அடைப்புக்குஆதரவுசென்னை: இன்று நடக்கும், நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளித்து, அதை வெற்றி பெறச் செய்வோம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க., தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்: டில்லியில் குவிந்துள்ள விவசாயிகள், இன்று, நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அது, தங்களுக்காக மட்டுமல்ல; நமக்காக.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகள் பறிபோகாமல் இருக்க, பட்டினிச்சாவைத் தடுத்திட, நம்மை காக்கும் விவசாயிகளை நாமும் காப்போம். அவர்களுக்கு அரணாக இருப்போம். நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளிப்போம்; அதை வெற்றி பெறச் செய்போம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


மாணவிக்குஎம்.எல்.ஏ., உதவிமதுரை வில்லாபுரத்தில் வசிக்கும் முனியசாமி, கொரோனா காலத்தால், முருக்கு வியாபாராம் செய்ய முடியாமல் நலிவடைந்துள்ளார். இதனால், அவரது இரண்டாவது மகள் கிருத்திகாதேவி, மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். இதனால், அவருக்கு, திருப்பரங்குன்றம் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன், கல்விக்கான கட்டணத்தை காசோலையாக வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
08-டிச-202023:29:11 IST Report Abuse
m.viswanathan இந்த அடைமொழி பட்டம் கொடுக்கும் வழக்கம் திமுகவில் தானே ஆரம்பிக்க பட்டது , அறிஞர், கலைஞர் , நாவலர் , பேராசிரியர் , பெரியார் , நாஞ்சிலார் , வீரபாண்டியார் , சொல்லின் செல்வர் , முரசொலி மாறன் , அஞ்சாநெஞ்சன் , இத்தியாதி , இத்தியாதி , ஆகவே அறிக்கை நாயகர் பட்டத்தை ஏற்று கொள்ள வேண்டியது தான்
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
08-டிச-202019:40:40 IST Report Abuse
கொக்கி குமாரு ஊழல் நாயகர், கமிஷன் நாயகர், கலெக்ஷன் நாயகர்... என்னப்பா இது சுடலை அவர் தந்தை கருணாவின் பெயரை எடப்பாடியாருக்கு கொடுக்குறேன்னு சொல்லுறாரு, கருணா கோபித்துக்கொண்டு மூன்று மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கப்போறாரு.
Rate this:
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
08-டிச-202021:25:45 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டுஎன்ன கொக்கி டிஜிட்டல் ஊழல் நாயகர்களை மறந்துவிட்ட...
Rate this:
Cancel
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
08-டிச-202018:52:20 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு ஒரே ஊருக்கு மூன்று சாலைகள் இருக்கும்போது, மேலும் ஒரு சாலை எதற்கு என்றுகூடவா கேள்வி எழவில்லை? இதுபோன்ற வழக்குகளில் விவாதங்களுடன், நேரடியாக களப்பணி செய்து தீர்ப்பு வழங்கலாமே. இங்கிருக்கும் உண்மைநிலையும், இந்த மக்களின் உணர்வுகளும் 2500 கி.மீ-க்கு அப்பால் இருப்பவர்களால் புரிந்துகொள்ளமுடியுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X