பொது செய்தி

தமிழ்நாடு

மூடங்கிய சுகாதார நிலையம் புனரமைக்க எதிர்பார்ப்பு

Added : டிச 07, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆவலப்பம்பட்டி துணை சுகாதார நிலையம், பழுதடைந்ததால் கடந்த எட்டு ஆண்டுகளாக கைவிடப்பட்டுள்ளது.பொள்ளாச்சி, ஆவலப்பம்பட்டியில், 40 ஆண்டுகளுக்கு முன், துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளாக, இந்த மையம் செயல்பாடின்றி மூடிக்கிடக்கிறது.துணை சுகாதார நிலைய கட்டடத்தின் ஒரு பகுதியில் சிகிச்சை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆவலப்பம்பட்டி துணை சுகாதார நிலையம், பழுதடைந்ததால் கடந்த எட்டு ஆண்டுகளாக கைவிடப்பட்டுள்ளது.பொள்ளாச்சி, ஆவலப்பம்பட்டியில், 40 ஆண்டுகளுக்கு முன், துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளாக, இந்த மையம் செயல்பாடின்றி மூடிக்கிடக்கிறது.
துணை சுகாதார நிலைய கட்டடத்தின் ஒரு பகுதியில் சிகிச்சை மையமும், மறுபக்கத்தில் குடியிருப்பும் இருந்தது. இந்த கட்டடத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.கடந்த, எட்டு ஆண்டுகளுக்கு முன், கட்டடத்தில் நீர் கசிவு ஏற்பட்டதால், மருத்துவ மையம் செயல்பாடு இல்லாமல் உள்ளது. தொடர்ந்து குடியிருப்பு பகுதியிலும் ஒழுகியதால், செவிலியரும் கட்டடத்தை காலி செய்து விட்டு, வேறு கட்டடத்தில் தங்கி, மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.இந்த கட்டடத்தை புனரமைத்தால், மீண்டும் துணை சுகாதார நிலையமாகவோ, சுகாதாரத்துறையின் வேறு பிரிவுக்கோ வழங்கலாம், என, மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X