தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்! முதல்வர், மத்திய அமைச்சருக்கு மனு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்! முதல்வர், மத்திய அமைச்சருக்கு மனு

Added : டிச 07, 2020
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் மற்றும் தமிழக முதல்வருக்கு பொள்ளாச்சி பகுதி வளர்ச்சி சங்கத்தினர் மனு அனுப்பியுள்ளனர்.கோவை மாவட்டம் தென்னை சாகுபடிக்கு பெயர் பெற்றது. போதிய பாசன நீர் கிடைப்பதால், தென்னை சாகுபடியில் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர். தென்னை சாகுபடி மற்றும் தேங்காய் உற்பத்தியில், முதலிடம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் மற்றும் தமிழக முதல்வருக்கு பொள்ளாச்சி பகுதி வளர்ச்சி சங்கத்தினர் மனு அனுப்பியுள்ளனர்.கோவை மாவட்டம் தென்னை சாகுபடிக்கு பெயர் பெற்றது. போதிய பாசன நீர் கிடைப்பதால், தென்னை சாகுபடியில் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர். தென்னை சாகுபடி மற்றும் தேங்காய் உற்பத்தியில், முதலிடம் வகிக்கிறது.ஆனால், பொள்ளாச்சியில், 'தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம்' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தது. தற்போது, இந்த கோரிக்கையை வலியுறுத்தி, அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.பொள்ளாச்சி பகுதி வளர்ச்சி சங்கத்தினர், தமிழக முதல்வர் மற்றும் மத்திய அமைச்சருக்கு இ - மெயில் வாயிலாக, மனு அனுப்பி கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி பகுதி வளர்ச்சி சங்கத்தினர் கூறியதாவது:பொள்ளாச்சி, உடுமலையில், தென்னை சார்ந்த தொழில்கள் நடைபெறுவதால், மத்திய அரசு, பொள்ளாச்சியை, தென்னை பொருட்கள் ஏற்றுமதி சிறப்பு வாய்ந்த நகரமாக அறிவித்தது.தென்னை விவசாயத்தில் உற்பத்தி அதிகரிக்கவும், பல்வேறு வகையான தென்னை வகைகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவும், 1981ம் ஆண்டு மத்திய அரசின் விவசாயத்துறை சார்பாக, கொச்சியை தலைமையிடமாக கொண்டு தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்கப்பட்டு செயல்படுகிறது.சென்னை, பெங்களூரூ, கவுகாத்தி ஆகிய மூன்று இடங்களில் மண்டல அலுவலகங்களும், புவனேஸ்வர், கல்கத்தா, பாட்னா, தானே, ைஹதராபாத், அந்தமான் ஆகிய ஆறு இடங்களில் மாநில மையமும் உள்ளது.ஆனால், இந்தியாவில் தென்னை சாகுபடி அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றான பொள்ளாச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் அலுவலகம் அமையவில்லை. இதனால், பொள்ளாச்சி பகுதி தென்னை விவசாயிகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல், வறட்சி, நிலத்தடி நீர்மட்டம் குறைவு, தென்னை பொருட்களுக்கு நிலையான வருமானம் இல்லாமை போன்ற காரணங்களால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, பொள்ளாச்சி, உடுமலை, ஆனைமலை, கிணத்துக்கடவு, மடத்துக்குளம் பகுதியில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் வாழ்வாதாரத்தை காக்க, பொள்ளாச்சியில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்தி மத்திய அமைச்சர், தமிழக முதல்வர் மற்றும் பா.ஜ., மாநிலத்துணைத்தலைவர் அண்ணாதுரை உள்ளிட்டோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X