தமிழ்நாடு

'நல்ல காலம் பிறக்கிறது!'விரைவில் திருப்பூர் பின்னலாடை துறை சிறப்பான வளர்ச்சி நிலையை எட்டிப்பிடிக்கும்

Updated : டிச 08, 2020 | Added : டிச 07, 2020
Share
Advertisement
திருப்பூர்:சூரியனை கண்ட பனிபோல், கொரோனா தந்த இன்னல்களெல்லாம் முழுமையாக விலகி, விரைவில் திருப்பூர் பின்னலாடை துறை சிறப்பான வளர்ச்சி நிலையை எட்டிப்பிடிக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.பின்னல் நகரான திருப்பூர், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டுக்கான ஆடை வர்த்தகம் மற்றும் 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் மேற்கொள்கிறது. வெளிமாவட்டம்,
 'நல்ல காலம் பிறக்கிறது!'விரைவில் திருப்பூர் பின்னலாடை துறை சிறப்பான வளர்ச்சி நிலையை எட்டிப்பிடிக்கும்

திருப்பூர்:சூரியனை கண்ட பனிபோல், கொரோனா தந்த இன்னல்களெல்லாம் முழுமையாக விலகி, விரைவில் திருப்பூர் பின்னலாடை துறை சிறப்பான வளர்ச்சி நிலையை எட்டிப்பிடிக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.பின்னல் நகரான திருப்பூர், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டுக்கான ஆடை வர்த்தகம் மற்றும் 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் மேற்கொள்கிறது.
வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் எட்டு லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணித்துவந்த பின்னலாடை துறைக்கு, கொரோனா பெரும் நெருக்கடி கொடுத்துவிட்டது. இதனால், ஆடை உற்பத்தி துறையினரும், தொழிலாளர்களும் தவித்தனர்.கொரோனா கால இழப்புகளை ஈடு செய்து, பிரச்னைகளை எதிர்த்து, எதிர்நீச்சல் போடத்துவங்கிவிட்டனர், தொழில்துறையினர். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலிருந்தும், நம் நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும், ஆர்டர்கள் வர துவங்கிவிட்டன. இது, தொழில்முனைவோர் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆடை உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டதால், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் லட்சக்கணக்கானோர் திருப்பூரைவிட்டு வெளியேறினர்.தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். அரசு அறிவித்த சலுகைகள், அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு அளித்தது.ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மே மாதம் முதல், நிறுவனங்கள் இயக்கத்தை துவக்கின. ஆனாலும், கடந்த செப்., மாதத்துக்கு பின்னரே, உற்பத்தி வேகமெடுத்துள்ளது.
தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் பொருளாதார தன்னிறைவு நிலையை எட்டுவதற்கு மேலும் ஆறு மாதங்களாகிவிடும்.தீபாவளிக்குப்பின், உள்நாட்டுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு, ஆர்டர்கள் அதிகளவு கிடைத்துள்ளன. அரசின் முழு ஆதரவு, தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் போதும். திருப்பூர் தொழில்துறை மேலும் சிறப்பான வளர்ச்சி பெறும்.
இதன்மூலம், நிறுவனங்கள், கடனிலிருந்து மீளும். தொழிலாளர் வருவாயும் அதிகரிக்கும். அத்தகைய நல்லநாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.அரசின் முழு ஆதரவு, தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் போதும். திருப்பூர் தொழில்துறை மேலும் சிறப்பான வளர்ச்சி பெறும். இதன்மூலம், நிறுவனங்கள், கடனிலிருந்து மீளும். தொழிலாளர் வருவாயும் அதிகரிக்கும். அத்தகைய நல்லநாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X