திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கொடிநாள் வசூலாக, 86.78 லட்சம் ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தின் கொடிநாள் வசூலாக, கடந்தாண்டு, 86.78 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அதில், ஒரு கோடியே, ஒரு லட்சத்து, 48 ஆயிரத்து, 590 ரூபாய் (116 சதவீதம்) வசூலிக்கப்பட்டது.மாநகராட்சிக்கு, ஒன்பது லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டதில், 2.05 லட்சம் மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு கொடிநாள் வசூலாக, 86.78 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான, கொடிநாள் வசூலை, கலெக்டர் நேற்று துவக்கி வைத்தார். டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் சந்திரசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE