கோவில் திருப்பணி தாமதம்: பக்தர்கள் மனவேதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் திருப்பணி தாமதம்: பக்தர்கள் மனவேதனை

Added : டிச 07, 2020
Share
பல்லடம்:அல்லாளபுரம் கோவில் திருப்பணியை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லடம் அருகே பழமை வாய்ந்த அல்லாளபுரம் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது.பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையால்,

பல்லடம்:அல்லாளபுரம் கோவில் திருப்பணியை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லடம் அருகே பழமை வாய்ந்த அல்லாளபுரம் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது.பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையால், கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, 2018 ஜூன் மாதம் பாலாலயம் நடத்தப்பட்டு, திருப்பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால், கும்பாபிேஷகம் தாமதமாகி வருவது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி வருகிறது.பக்தர்கள் சிலர் கூறியதாவது:அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி கோவிலை, அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் விட்டதால் கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. தொடர்ந்து வலியுறுத்தியதால் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது.
மூலவர் வெளியே வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக தற்காலிக பூஜைகளே நடந்து வருகின்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் குறித்த அறிவிப்பை அதிகாரிகள் வெளியிடாமல் உள்ளனர். எனவே, இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X