திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 7.40 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அரிசி பெறும் கார்டுகள் மட்டும், 6.85 லட்சம் கார்டுகள் உள்ளன. கூடுதல் சர்க்கரை பெறும், சர்க்கரை கார்டுகள், 29 ஆயிரத்து, 505 உள்ளன.தமிழகத்தில் உள்ள, சர்க்கரை கார்டுதாரர், அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பெற முடியாத சூழல் ஏற்பட்டது. பொங்கல் பரிசு கூட பெற முடியாமல் இருந்தது. கடந்த ஆண்டு, சர்க்கரை கார்டுகளை, அரிசி பெறும் கார்டாக மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது.விடுபட்டவர்கள், மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, மீண்டும், 20ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, சர்க்கரை கார்டுதாரர்கள், 'ஆன்லைன்' மூலமாகவோ, அல்லது தாலுகா அலுவலகத்தில் நேரிலோ, அரிசி கார்டாக மாற்றக்கோரி விண்ணப்பிக்கலாம். www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில், தங்களது கார்டை வகைமாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE