திருப்பூர்:திருப்பூர் உட்பட, ஆறு மாவட்டங்களில், 'பயோமெட்ரிக்' பதிவு நேற்று முதல் கட்டாயமாகிஉள்ளது.தமிழக அரசின், பொது வினியோக திட்டத்தை மேம்படுத்தும் வகையில், கை விரல் ரேகை மூலம் சரிபார்க்கும், 'பயோமெட்ரிக்' தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது.ரேஷன் கார்டுதாரர், கடைக்கு சென்று, கைவிரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே, பொருட்களை பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.கடந்த அக்., மாதம் 'பயோமெட்ரிக்' தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டது. முதியோரின் கை விரல் ரேகை பதிவு செய்வதில் குளறுபடி ஏற்பட்டது. ஒவ்வொரு ரேஷன் கடையிலும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போது மீண்டும், நேற்று முதல், 'பயோமெட்ரிக்' பதிவு முறை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரியலுார், பெரம்பலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், திருப்பூர் என, ஆறு மாவட்டங்களில், 'பயோமெட்ரிக்' நேற்று முதல் கட்டாயமாகியுள்ளது.'பயோமெட்ரிக்' பதிவு மற்றும் சரிபார்ப்பு முறையை எளிதாக்கும் வகையில், தொழில்நுட்ப பணியாளர், ரேஷன்கடை வாரியாக சென்று உதவி செய்யவும், கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ரேஷன் கடைகளில், மீண்டும் 'பயோமெட்ரிக்' பதிவு கட்டாயமாகி உள்ளது.எளிதாக, கை ரேகை சரிபார்த்து, பொருள் வினியோகம் நடந்து வருகிறது. குளறுபடி ஏற்பட்டாலும், உடனுக்குடன் சரிபார்க்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE