திருப்பூர்:தென்னம்பாளையத்தில் நேற்று கூடிய கால்நடைச் சந்தைக்கு, 1,200 மாடுகள் வரத்தாக இருந்தது. 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.திங்கள்தோறும் தென்னம்பாளையத்தில் கால்நடை சந்தை கூடுவது வழக்கம். 2:00 முதல், மாலை 5:00 மணி வரை நடக்கும் சந்தைக்கு கேரளா, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடு, கன்றுக்குட்டி, காளைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.கேரள - தமிழக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அம்மாநில வியாபாரிகள் அதிகளவில் நேற்று வந்திருந்தனர். 1,200 கால்நடைகள் விற்பனைக்கு வந்த போதும், மழை துாறல், பனிப்பொழிவு மேய்ச்சல் நிலம் அதிகரித்துள்ளதால், வளர்ப்பு கன்று, மாடுகளை வாங்க வியாபாரிகளிடையே போட்டாபோட்டி நிலவியது.முதல் தர மாடு, 45 ஆயிரம் ரூபாய் வரையும், இரண்டாம் ரகம், 38 ஆயிரம் ரூபாய் வரையும் விற்றது. கன்றுகுட்டிகள், 8,000 ரூபாய் துவக்க விலையாகவும் இருந்தது. மொத்தம், 2 கோடி ரூபாய் என்ற அளவுக்கு வர்த்தகம் நடந்ததாக சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE