திருப்பூர்:சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளருக்கு, குறைந்தபட்சம், 2,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.இந்த தொகை குறைவாக இருப்பதாகவும், ஓய்வூதிய உயர்வை அதிகரிக்க வேண்டுமென, நேற்று சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்கள் மூலம், முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.பணியாளர், ஒவ்வொருவரும் மனு வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர். மனுவில், 'குறைந்தபட்ச பென்சனாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸ், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE