அவிநாசி:அவிநாசி அருகே பூ பறித்து கொண்டிருந்த பெண்ணிடம், நகையை பறித்து சென்ற இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.கைகாட்டிப்புதுார், அவிநாசிலிங்கம்பாளையம் வீதியில், வசிப்பவர் மதியழகி, 60. இவர், நேற்று காலை, 6:00 மணிக்கு, தனது வீட்டின் வெளியில் உள்ள பூச்செடியில் இருந்து பூக்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக டூவீலரில் வேகமாக வந்த இருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தலைமறைவாகினர். அவர் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE