அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திலும் தாமரை மலரும்: ம.பி., முதல்வர் நம்பிக்கை

Added : டிச 07, 2020
Share
Advertisement
துாத்துக்குடி : ''தமிழகத்தில் இருள் நீங்கும்; தாமரை மலரும்,'' என, ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், திருச்செந்துார் வேல் யாத்திரை நிறைவு விழாவில் பேசினார். தமிழக பா.ஜ., சார்பில், நவ., 6 ல் திருத்தணியில், வேல் யாத்திரை துவங்கி, டிச., 6ல் திருச்செந்துாரில் நிறைவு பெற்றது. யாத்திரை நிறைவு விழா, நேற்று திருச்செந்துார் கோவில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில்

துாத்துக்குடி : ''தமிழகத்தில் இருள் நீங்கும்; தாமரை மலரும்,'' என, ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், திருச்செந்துார் வேல் யாத்திரை நிறைவு விழாவில் பேசினார்.

தமிழக பா.ஜ., சார்பில், நவ., 6 ல் திருத்தணியில், வேல் யாத்திரை துவங்கி, டிச., 6ல் திருச்செந்துாரில் நிறைவு பெற்றது. யாத்திரை நிறைவு விழா, நேற்று திருச்செந்துார் கோவில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பேசியதாவது:தமிழகத்தில் முருகக்கடவுளாக திகழ்பவர், இந்தியா முழுதும் கார்த்திகேயனாக அருள்பாலிக்கிறார். சூரனை அழித்த இந்த மண்ணில் நடக்கும் வேல் யாத்திரை மூலம், கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரான கொள்கைகள் அழிக்கப்படும்.

தடுப்பூசி தயாரிப்பு : அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள், கொரோனாவை எதிர்கொள்ள சிரமப்பட்டன. மோடி அரசின் திட்டங்களால், நாம் சிறப்பாக எதிர்கொண்டோம். வெற்றி பெற்றிருக்கிறோம். தடுப்பூசியும் இந்தியாவில் தயாரிக்கும் நிலையில் உள்ளோம். 'கொடுத்ததெல்லாம் கொடுத்தார். யாருக்காக கொடுத்தார். ஒருவருக்கா கொடுத்தார். ஊருக்கெல்லாம் கொடுத்தார்' என்ற எம்.ஜி.ஆர். பாடலை போல, அனைத்து தரப்பினருக்கும் மோடி நிதியுதவி அளித்துள்ளார்.

தமிழகத்தில், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எந்தவகையிலும் தமிழகம் பாதிப்படைய அனுமதிக்க மாட்டோம். பீஹாரை தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் ஆட்சி அமைப்போம்.தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தின் இருள் நீங்கும். வெளிச்சம் வரும். தாமரை மலரும். தமிழகத்தில் தி.மு.க., - காங்., கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் யார் கூட்டணி வைத்தாலும், மூழ்க வேண்டியது தான். வேல்யாத்திரை எழுச்சியோடு மக்களை சந்திப்போம். இவ்வாறு, சவுகான் பேசினார்.

4,000 கி.மீ., பயணம் : மாநில தலைவர் முருகன் பேசியதாவது:தமிழகம் முழுதும், 4,000 கி.மீ., பயணித்துள்ளோம். திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் நடந்தது போல, தி.மு.க., கூட்டத்தையும் ஓட ஓட விரட்டுவோம். தமிழகத்தில், பா.ஜ., தவிர்க்க முடியாத கட்சியாக மாறியுள்ளது. மோடியின் ஆட்சியை இங்கும் ஏற்படுத்துவோம். வரும் சட்டசபையில், பா.ஜ.,வினர் அதிகமாக இருப்பர்.இவ்வாறு, முருகன் பேசினார்.மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், பா.ஜ., தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி., சுதாகர்ரெட்டி, மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன்.எச்.ராஜா, துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, நடிகை குஷ்பு, வேல் யாத்திரை பொறுப்பாளர் நரேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X