பொது செய்தி

தமிழ்நாடு

‛டாஸ்மாக்' பார்கள் விரைவில் திறப்பு?

Added : டிச 07, 2020
Share
Advertisement
சென்னை : மதுக் கடைகளை ஒட்டி, அனுமதியுடன் செயல்பட்டு வந்த, 'பார்'களை விரைவில் திறக்க, 'டாஸ்மாக்' நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது. டாஸ்மாக் அனுமதியுடன், 3,000 மதுக் கடைகளை ஒட்டி, தனியார் பார்களை நடத்தினர். அதில், குளிர்பானம், குடிநீர், தின்பண்டங்கள் விற்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று

சென்னை : மதுக் கடைகளை ஒட்டி, அனுமதியுடன் செயல்பட்டு வந்த, 'பார்'களை விரைவில் திறக்க, 'டாஸ்மாக்' நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது. டாஸ்மாக் அனுமதியுடன், 3,000 மதுக் கடைகளை ஒட்டி, தனியார் பார்களை நடத்தினர். அதில், குளிர்பானம், குடிநீர், தின்பண்டங்கள் விற்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் மூடப்பட்ட பார்கள், இதுவரை திறக்கப்படவில்லை. மதுக் கடைகள், வழக்கம் போல செயல்படுகின்றன. இதனால், பார்களை திறக்க அனுமதிக்குமாறு, அவற்றின் உரிமையாளர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஏற்கனவே அனுமதி பெற்று செயல்பட்டு வந்த, பார்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது, அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் என அனைவரும், மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 'அவர்கள் வந்ததும், அவர்களுடன் ஆலோசித்து, விரைவில், பார்களை திறப்பதற்கான தேதி அறிவிக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X