கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நில அபகரிப்புக்கு தடுப்பு சட்டம் எப்போது? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Updated : டிச 08, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை : 'நில அபகரிப்பு தடுப்பு சிறப்புச் சட்டம் எப்போது கொண்டு வரப்படும்' என்பதை தெளிவுபடுத்த, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த, முத்தையா தாக்கல் செய்த பொதுநல மனு: நில அபகரிப்பை தடுக்க, தனிப்பிரிவு மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு, 2011ல் அரசாணை பிறப்பித்தது. இதை, உயர் நீதிமன்றம் ரத்து

மதுரை : 'நில அபகரிப்பு தடுப்பு சிறப்புச் சட்டம் எப்போது கொண்டு வரப்படும்' என்பதை தெளிவுபடுத்த, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த, முத்தையா தாக்கல் செய்த பொதுநல மனு: நில அபகரிப்பை தடுக்க, தனிப்பிரிவு மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு, 2011ல் அரசாணை பிறப்பித்தது. இதை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அரசு தகுந்த சட்டம் கொண்டு வரலாம் என, அறிவுறுத்தியது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நில அபகரிப்பை தடுக்க, சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என, சட்டசபையில், தமிழக அரசு அறிவித்தது; இதுவரை நடவடிக்கை இல்லை.

நில அபகரிப்பு தடுப்பு சிறப்புச் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: அரசியல், பண பலம், அதிகார பலமிக்கவர்கள், அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிக்கின்றனர். காலி இடத்தில், சில அரசியல் கட்சிகளின் கொடிகளை நட்டு ஆக்கிரமிக்கின்றனர். நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பின் பின்புலத்தில், சில வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிந்தால் போராட்டம் நடக்குமோ என்ற அச்சத்தில், வழக்குப் பதிவு செய்வதை போலீசார் தவிர்க்கின்றனர். நில அபகரிப்பிற்கு, போலி ஆவணங்கள் தயாரிக்க, சார் -பதிவாளர் அலுவலகங்களைச் சேர்ந்த சிலர் உடந்தையாக உள்ளனர்.

தமிழக அரசு விரும்பினால், பிற மாநிலங்களில் உள்ளது போல, நில அபகரிப்பு தடுப்பு சிறப்புச் சட்டத்தை, அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் அல்லது சிறப்பு கூட்டத்தை கூட்டி கொண்டு வரலாம். எப்போது, சட்டம் கொண்டு வரப்படும் என்பதற்கு, தமிழக அரசிடம் விபரம் பெற்று, அரசு தலைமை வழக்கறிஞர், டிச., 16ல் தெரிவிக்க வேண்டும். தமிழக உள்துறை செயலர், சட்டத்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது. இவ்வாறு இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
08-டிச-202009:52:14 IST Report Abuse
samkey //நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: அரசியல், பண பலம், அதிகார பலமிக்கவர்கள், அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிக்கின்றனர். காலி இடத்தில், சில அரசியல் கட்சிகளின் கொடிகளை நட்டு ஆக்கிரமிக்கின்றனர். நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பின் பின்புலத்தில், சில வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிந்தால் போராட்டம் நடக்குமோ என்ற அச்சத்தில், வழக்குப் பதிவு செய்வதை போலீசார் தவிர்க்கின்றனர். நில அபகரிப்பிற்கு, போலி ஆவணங்கள் தயாரிக்க, சார் -பதிவாளர் அலுவலகங்களைச் சேர்ந்த சிலர் உடந்தையாக உள்ளனர்// நீங்கள் சொல்வது நூறு சதவீத உண்மை. இவைகள் மட்டுமல்லாது இப்போது சர்வேயணுகளை கைக்குள் போட்டுக்கொண்டு விஞ்ஞான முறையில் நில அபகரிப்பு தொடர்கிறது. எப்படி என்றால் பட்டாவில் நில அளவு சரியாக இருக்கும் ஆனால் பூமியில் சர்வேயன் காசை வாங்கிக்கொண்டு இடத்தை இன்னொரு நபருக்கு சாதகமாக தெரிந்தே பிழையாக அளந்து விடுவான். வழக்கம் போல தாசி தாரும் பங்கு வாங்கி கொண்டு கண்டு கொள்ள மாட்டான். வழக்கம்போல கோர்ட்டுக்கு சென்றுதான் தீர்வு பெற வேண்டும். கோர்ட்டிலும் இப்படி தெரிந்தே தவறு செய்பவனுகல் மீது நேரடியாக வழக்கு போட முடியாது. இதற்கும் ஒரு தீர்வு கொடுங்கள் அய்யா.இழப்பீட்டை மார்க்கெட் மதிப்பில் அவனுகளது ஓய்வு நிதியில் இருந்து பிடித்தம் செய்து பாதிக்கப் பட்டவருக்கு தரவும் ஆவண செய்யுங்கள் அய்யா. நீதியரசர் கிருபாகரன் போன்ற ஒரு சில புண்ணியவான்கள் இருப்பதால்தான் நீதி இன்னும் சாகவில்லை.
Rate this:
Cancel
karthi - chennai,இந்தியா
08-டிச-202009:17:40 IST Report Abuse
karthi ஐய்யா, உயர்நீதி மன்றம் சொல்லுவது உண்மை அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் வழக்கறிஞர்கள் உள்ளார்கள். உயர்நிதி மன்றம் தலைமை நிதிபதி தலமையான அமர்வு அளிக்கும் தீர்ப்புக்கு உயர்நிதி மன்றத்தில் மறைத்து தடையானை பெற்று விடுகின்றனர். இவர்கள் மீது நிதி மன்றம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் .சாதாரண மனிதன் போராடமுடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X