வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம்:

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
''வேளாண் சட்டங்கள் குறித்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன,'' என, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.விவசாயிகள் போராட்டம் குறித்து, மத்திய சட்டத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:அமைதியாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில், எதிர்க்கட்சிகள் மூக்கை நுழைத்துள்ளன. எந்த வகையிலாவது, மத்திய
 
எதிர்க்கட்சிகள் , அமைச்சர் ,பாய்ச்சல்

''வேளாண் சட்டங்கள் குறித்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன,'' என, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து, மத்திய சட்டத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:அமைதியாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில், எதிர்க்கட்சிகள் மூக்கை நுழைத்துள்ளன. எந்த வகையிலாவது, மத்திய அரசை எதிர்க்க வேண்டும்; இதுதான், எதிர்க்கட்சிகளின் நோக்கம்.


latest tamil news



'ஏற்றுமதிக்கான எல்லா தடைகளையும் நீக்கி, விவசாய உற்பத்தி பொருட்களை வர்த்தக மயமாக மாற்றுவோம்' என, 2019 தேர்தல் அறிக்கையிலேயே காங்கிரஸ் கூறியிருந்தது. தற்போது, காங்கிரஸ் தலைவர்கள் மாற்றி பேசுகின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், இந்த சட்டங்களை எதிர்ப்பதுதான் ஆச்சரியம். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, விவசாய சந்தைக்குள், தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்கும்படி கேட்டு, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், கடிதமே எழுதியவர் இவர்.விவசாயிகள் பிரச்னையில், எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil Kumar - chennai,இந்தியா
08-டிச-202014:51:45 IST Report Abuse
Senthil Kumar விவசாய சட்டம் என்ன சொல்கிறது.
Rate this:
Cancel
PALANISWAMY - COIMBATORE ,இந்தியா
08-டிச-202012:28:03 IST Report Abuse
PALANISWAMY விவசாய சட்டம் என்ன சொல்கிறது. எந்த வகையில் பாதிப்பதால் விவசாயிகள் போராடுகிறார்கள். அவர்கள் செய்வது நியாயமா என்பதை அந்த சட்டங்களை முழுமையாக படித்து விட்டு கருத்து சொன்னால் நன்றாக இருக்கும். அத்யாவசிய பொருட்கள் சட்டம் (Essential Commodities Act) லிருந்து பல விவசாய பொருட்களை நீக்க காரணம் என்ன ? குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்து கொடுப்பதில் என்ன சிரமம்? விவசாயிகள் நிறுவனங்களோடு போடும் ஒப்பந்தத்தை நிறுவனங்கள் மீறினால் எங்கு நியாயம் கேட்பது? நீதிமன்றத்தை கூட நாட முடியாதளவு சட்டங்கள் உள்ளன. விவசாயிகள் தனக்கு வேண்டியது மட்டும் விளைவித்து ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் வயலில் இறங்காமல் இருந்தால் நம் நிலை என்ன? வருடம் முழுதும் தனது உழைப்பு உடமைகளை முதலீடு செய்து விட்டு அது அறுவடை செய்யும் நேரத்தில் குறைந்த விலை கூட இல்லாவிடில் அந்த விவசாயி என்ன செய்வார்? நீண்ட தூரம் கொண்டு சென்று விற்க அவரிடம் முதலீடு இருக்குமா? யோசித்து கருத்து சொல்லுங்கள் நண்பர்களே.
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - கழக பாசறை தொண்டன் ,இந்தியா
08-டிச-202013:54:32 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ரொம்ப சிம்பிள் அத்யவாஸ பொருட்கள் லிஸ்டில் இருந்து வெங்காயம் தூக்கியவுடன் பதுக்கல் வந்து விலை ஏறியது அப்புறம் என்ன...
Rate this:
Cancel
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
08-டிச-202011:44:16 IST Report Abuse
P.K.SELVARAJ குஜராத் முதல்வர் ஆக இருந்தபோது ஆதார் மற்றும் GST எதிர்ப்பு பின்னர் PM ஆனவுடன் அதை கொண்டு வந்தது, அது எந்த மாதிரி மந்திரி அவர்களே? "ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்பிற்கின் தீதுண்டோ மன்னும் உயிற்கு"
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
08-டிச-202013:31:09 IST Report Abuse
Suppanசரியான டிஜிட்டல் கட்டமைப்பு இல்லாமல் ஜி எஸ் டீ யை அமல் படுத்தாதீர்கள் என்றர் மோதி ஒன்பது ஆண்டுகளுக்கு முன். இதையேதான் அப்பொழுதைய பிரதமருக்கும் நிதி மந்திரிக்கும் கூறினார். உங்களுக்கு ஹிந்தி தெறியாவிட்டால் ஹிந்தி தெரிந்தவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பாருங்கள்...
Rate this:
Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
08-டிச-202016:30:47 IST Report Abuse
Rajanஹே விடப்ப தீயமுக அல்லக்கைஸ் ஹிந்தி வேணாம் போடா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X