சென்னை : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள, துணை மின் நிலையங்கள், ஐந்து பாலங்கள் மற்றும் கட்டடங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, நேற்று முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார்.
தமிழகத்தில், எரிசக்தி துறை சார்பில், வெவ்வேறு இடங்களில், 29௭ கோடி ரூபாய் மதிப்பில், 18 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சியில், 5.22 கோடி ரூபாயில், தலைமை பொறியாளர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளதுl உள்ளாட்சி துறை சார்பில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 6.42 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாக கட்டடம். திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயத்தில், 2.63 கோடி ரூபாயில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
திருவாரூர், கோவை மாவட்டங்களில், 8.09 கோடி ரூபாயில், ஐந்து பாலங்கள் கட்டப்பட்டுள்ளனl வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் பகுதிகளில், 1.88 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, இரண்டு சார் - பதிவாளர் அலுவலகம், திருச்சி மாவட்டம், மணப்பாறையில், 84 லட்சம் ரூபாய் செலவில், மாநில வரி அலுவலக கட்டடமும் கட்டப்பட்டுள்ளது.இவை அனைத்தையும், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், வீரமணி, பெஞ்சமின், நிலோபர் கபீல், பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கருணை அடிப்படையில் வேலைபதிவுத்துறையில், பணிக் காலத்தில் மறைந்த, 14 பேரின் வாரிசுதாரர்களில், 13 பேருக்கு,இளநிலை உதவியாளர், ஒருவருக்கு அலுவலக உதவியாளர் பணி, கருணை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு அடையாளமாக, நேற்று தலைமை செயலகத்தில், ஏழு பேருக்கு பணி நியமன ஆணைகளை, முதல்வர் இ.பி.எஸ்., வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE