பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆற்றில் வெள்ளம்: மக்களுக்கு எச்சரிக்கை

Added : டிச 07, 2020
Share
Advertisement
உடுமலை : அமராவதி மற்றும் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழையால், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை நிரம்பி, மூன்று நாட்களாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, அமராவதி அணையில், மொத்தமுள்ள, 90 அடியில், 89.34 அடிக்கு நீர் மட்டம் இருந்தது.அணைக்கு வினாடிக்கு, 8,463 கன அடி நீர் வரத்து இருந்தது. ஆற்றில், வினாடிக்கு, 8,000 ஆயிரம் கன

உடுமலை : அமராவதி மற்றும் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழையால், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை நிரம்பி, மூன்று நாட்களாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, அமராவதி அணையில், மொத்தமுள்ள, 90 அடியில், 89.34 அடிக்கு நீர் மட்டம் இருந்தது.அணைக்கு வினாடிக்கு, 8,463 கன அடி நீர் வரத்து இருந்தது. ஆற்றில், வினாடிக்கு, 8,000 ஆயிரம் கன அடி நீரும், பிரதான கால்வாயில், 450 கன அடி நீரும் திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமராவதி ஆற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், திருப்பூர், கரூர் மாவட்டங்களில், ஆற்றின் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும், பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X