பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவிட அருங்காட்சியகம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
சென்னை : ஜெயலலிதா நினைவிட அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பணிகளை, மூன்று மாதங்களில் முடிக்கும் வகையில், தனியார் நிறுவனத்திடம், பொதுப் பணித் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. மறைந்த ஜெயலலிதாவிற்கு, சென்னை, மெரினா கடற்கரையில், 50.8 கோடி ரூபாய் செலவில், நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதோடு, எம்.ஜி.ஆர்., நினைவிடம் மற்றும் அவரதுஅருங்காட்சியகம்

சென்னை : ஜெயலலிதா நினைவிட அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பணிகளை, மூன்று மாதங்களில் முடிக்கும் வகையில், தனியார் நிறுவனத்திடம், பொதுப் பணித் துறை ஒப்பந்தம் செய்துள்ளது.

மறைந்த ஜெயலலிதாவிற்கு, சென்னை, மெரினா கடற்கரையில், 50.8 கோடி ரூபாய் செலவில், நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதோடு, எம்.ஜி.ஆர்., நினைவிடம் மற்றும் அவரதுஅருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.'எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடம்' என, இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகில் ஒருபகுதியில், அறிவுசார் பூங்கா, மற்றொரு பகுதியில், அருங்காட்சியக கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

அதில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ கண்காட்சி அரங்கம் அமைய உள்ளது.மின்னணு தொழில்நுட்பத்தில், ஜெ., படத்திற்கு பொது மக்கள் மலர் துாவுதல், அவருடன், மொபைல் போனில் புகைப்படம் எடுத்தல் போன்ற, வசதிகளும் செய்யப்பட உள்ளன. அறிவுசார் பூங்காவில், ஜெயலலிதா அரசு செயல்படுத்திய இலவச சைக்கிள், லேப்டாப், மாடித் தோட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல் விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள், சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மூன்று மாதங்களில், இப்பணிகளை முடிக்கும் வகையில், இந்நிறுவனத்திடம், பொதுப்பணித் துறை ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போது, பணிகள் வேகப்படுத்தப்பட்டு இருப்பதால், பிப்., மாதம், ஜெ., பிறந்த நாளில், இந்த நினைவிடம் திறக்கப்பட வாய்ப்புள்ளது.இதற்கிடையே, கட்டுமானப் பணிகளை வேகப்படுத்துவது குறித்து, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கட்டுமான ஒப்பந்த நிறுவனம், கட்டடக் கலை நிறுவனம், அருங்காட்சியக ஒப்பந்த நிறுவனம், 'பெயின்டிங்' ஒப்பந்த நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X