பொது செய்தி

தமிழ்நாடு

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நீதிபதி குலசேகரன் ஆணையம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
சென்னை : ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக,அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி குலசேகரன் தலைமையில், ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., அறிக்கை:தமிழகத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும், ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அதன் காரணமாகவும், அரசின்

சென்னை : ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக,அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி குலசேகரன் தலைமையில், ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., அறிக்கை:தமிழகத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும், ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அதன் காரணமாகவும், அரசின் பல்வேறு நலத்திட்ட பயன்கள், அனைத்து பிரிவினரையும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியும், உச்ச நீதிமன்றத்தில் உள்ள, 69 சதவீத இட ஒதுக்கீடு வழக்குகளை எதிர்கொள்ளவும், தேவையான புள்ளி விபரங்களை பெற, அரசு முடிவு செய்தது.

அதற்காக, 'ஜாதிவாரியான புள்ளி விபரங்களை சேகரித்து, அறிக்கை சமர்பிக்க, அதற்கென பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும்' என, டிச., 1ல், அரசு உத்தரவிட்டது. தற்போதைய நிலவரப்படி, ஜாதிவாரியாக புள்ளி விபரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அவ்விபரங்களை திரட்டி, அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி குலசேகரன் தலைமையில், ஆணையம் அமைக்கப்படும்.இந்த ஆணையம், உடனடியாக செயல்பட்டுக்கு வருவதோடு, விரைவில், அதன் பணியை துவக்கும். ஜெயலலிதா வழியில் செயல்படும், அ.தி.மு.க., அரசு, சமூக நீதியை நிலைநாட்ட, அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X