பரமக்குடி : பரமக்குடி மற்றும் சத்திரக்குடி வேளாண்மை துறை சார்பில் உலகமண் தினம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
போகலுார் ஒன்றியம்மஞ்சக்கொல்லை, மென்னந்தி, தீயனுார், சேமனுாரில் விவசாயிகளிடம் மண்ணின் தன்மை, அதன் முக்கியத்துவம் குறித்து சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் கதிரேசன் பேசினார்.தாவரத்திற்கு மண்ணிலிருந்து நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம், மாங்கனீசு, போரான், தாமிரம், துத்தநாகம்,குளோரின் போன்றவைகள் சத்துக்களாக கிடைக்கிறது. மண்ணின்களர்த்தன்மை, உவர்த்தன்மை, மண்ணின் குறைகளாகும்.
அவற்றின் இயல்புகளை இயற்கை உரமிட்டு, வளத்தை மாற்றலாம்.பரமக்குடி வேளாண் துறை சார்பில் பாம்பூரில், நடந்த உலக மண்தின விழாவில், உதவி இயக்குநர் ராஜேந்திரன், மண்ணின் சத்துக்களான பேரூட்டம் மற்றும் உயிர் உரங்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE