பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு வேகமாக குறைகிறது

Added : டிச 07, 2020
Share
Advertisement
மதுரை : கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் நேற்று பாதிப்பு பதிவானது. மதுரை மாவட்டத்தில் புதிதாக 32 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 19,243 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். நேற்று 42 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 19,911 ஆகும். இதுவரை 441 பேர் இறந்துள்ளனர். தற்போது 227 பேர் சிகிச்சை

மதுரை : கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் நேற்று பாதிப்பு பதிவானது.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 32 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 19,243 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். நேற்று 42 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 19,911 ஆகும். இதுவரை 441 பேர் இறந்துள்ளனர். தற்போது 227 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 26 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதால் குணமானோர் எண்ணிக்கை 10,085 ஆக உயர்ந்தது. புதிதாக 21 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 10,473 ஆக அதிகரித்தது. இன்னும் 193 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 195 பேர் பலியாகியுள்ளனர்.தேனி தேனி மாவட்டத்தில் நேற்று 12 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். இதுவரை மொத்தம் 16,423 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். புதிதாக 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,668 ஆக உயர்ந்தது. நேற்று கோம்பை 60 வயது மூதாட்டி உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 316 ஆனது.ராமநாதபுரம்ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து நேற்று 7 பேர் மீண்டனர். 6 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. 39 பேர் சிகிச்சையில் உள்ளனர்.6241 பேர் பாதிக்கப்பட்டதில் 6071 பேர் குணமடைந்தனர். 131 பேர் பலியாகினர்.--சிவகங்கைசிவகங்கை மாவட்டத்தில் நேற்று 5 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 6 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 6367 பேர் பாதிக்கப்பட்டதில் 6176 பேர் குணமடைந்தனர். 126 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 65 பேர் சிகிச்சையில் உள்ளனர்.விருதுநகர்விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 16 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை பாதிப்புக்குள்ளாகிய 16,022 பேரில் 15,652 பேர் குணமடைந்துள்ளனர். 142 பேர் சிகிச்சையில் உள்ளனர். 228 பேர் பலியாகி உள்ளனர்.திருநெல்வேலி திருநெல்வேலியில் 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 14,591 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 14,977 ஆனது. தற்போது 176 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 210 பேர் இறந்துள்ளனர்.தென்காசி தென்காசியில் நேற்று 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 7889 பேர் குணமடைந்துள்ளனர்.நேற்று 7 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 8137 ஆனது. தற்போது 93 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 155 பேர் இறந்துள்ளனர்துாத்துக்குடிதுாத்துக்குடியில் நேற்று 18 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 15,509 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிப்பு 15,793 ஆனது. தற்போது 145 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 139 பேர் இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X