சென்னை : செங்கல்பட்டு மாவட்டத்தில், பாரம்பரியமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு, 60க்கும் மேற்பட்ட வகையை சேர்ந்த, 40 ஆயிரம் பறவைகள் வந்து செல்கின்றன.
இங்கு வழக்கமாக, நவம்பர், 1ல் வலசை பறவைகள் சீசன் துவங்கி விடும். இந்த ஆண்டு தண்ணீர் வரத்து சிக்கலானதால், பறவைகள் சீசன் துவங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. பின், வருவாய் துறை, பொதுப்பணித்துறை தலையீட்டால், தண்ணீர் வரத்து உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், சொற்ப அளவிலேயே பறவைகள் வந்துள்ளன.ஊரடங்கால் மூடப்பட்ட சரணாலயம் இன்னும் திறக்கப்படாததால், தினசரி பொதுமக்கள் வந்து, ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதேபோல, புலிகள் காப்பகங்கள் உள்ளிட்ட இடங்களையும் திறப்பதில், வனத்துறை உரிய முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
இது குறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வேடந்தாங்கல் உள்ளிட்ட பறவைகள் மற்றும் வன உயிரின சரணாலயங்களை திறப்பது குறித்து, இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE