ராணிப்பேட்டை : கலவகுண்டா அணையில் இருந்து, பொன்னை ஆற்றில், 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்துாரில் பெய்து வரும் கனமழையால், கலவகுண்டா அணையில் இருந்து, வினாடிக்கு, 20 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று அதிகாலை, 2:00 மணியில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது.இதனால், ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை அணை நிரம்பி வழிந்து வருகிறது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். பொன்னை, முப்பது வெட்டி உள்ளிட்ட, 30 கிராமங்களில் தண்டோரா போடப்பட்டு, பாலாற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு விடப்பட்ட, 5,000 கால்நடைகள், அதன் உரிமையாளர்கள் மூலம், அப்புறப்படுத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE