பொது செய்தி

தமிழ்நாடு

கரணம் தப்பினால் மரணம்...

Added : டிச 07, 2020
Share
Advertisement
பல்லடம்:'கரணம் தப்பினால் மரணம்' என்பதற்கு இணங்க, பல்லடம்என்.எச்., ரோட்டின் அவல நிலை வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.பல்லடம் வழியே தினமும், பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கோவை வழியாக கேரள மாநிலத்தை இணைப்பதால், சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. ஆனால், சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் அவல நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பல இன்னல்களை

பல்லடம்:'கரணம் தப்பினால் மரணம்' என்பதற்கு இணங்க, பல்லடம்என்.எச்., ரோட்டின் அவல நிலை வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.பல்லடம் வழியே தினமும், பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கோவை வழியாக கேரள மாநிலத்தை இணைப்பதால், சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. ஆனால், சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் அவல நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.வாகன ஓட்டிகள் கூறியதாவது:பல ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட என்.எச்., ரோடு இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. சில ஆண்டுகளாக, வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.மழைக்காலங்களில், ரோட்டிலுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்று இடையூறு ஏற்படுத்தி வருகிறது. கடந்த முறை மழை பெய்தபோது, பள்ளத்தை மூட ஜல்லிகள் கொட்டப்பட்டன. அடுத்தமழைக்கே அவை கரைந்து மீண்டும் பள்ளங்கள் உருவாகின.கடந்த சில தினங்களாக, பல்லடம் வட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பள்ளங்கள் பெரிதாகி அச்சுறுத்தி வருகின்றன. மழை நீர் தேங்கி நிற்பது தெரியாமல், வாகனங்கள் தள்ளாடும் நிலை ஏற்படுகிறது.இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, பள்ளம் இருப்பது தெரியாமல், டூவீலரில் வந்து விழுந்து பலரும் காயமடைந்துள்ளனர். ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.விபத்துகளை தடுக்கும் வகையிலும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X