பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் சக்தி விருது பெற விண்ணப்பிக்கலாம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
கோவை:மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம், 'மகளிர் சக்தி விருது' பெற தகுதியான பெண்கள், குழுக்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மகளிருக்காக தனித்துவமான சேவை செய்த, பின் தங்கிய, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேவை புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு

கோவை:மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம், 'மகளிர் சக்தி விருது' பெற தகுதியான பெண்கள், குழுக்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மகளிருக்காக தனித்துவமான சேவை செய்த, பின் தங்கிய, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேவை புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பங்கு, பெண்கள் மீதான கொடுமை, வன்முறை, பெண்கள் முன்னேற்றத்தில் பங்களிப்பு செய்த தனி பெண், குழுக்கள், நிறுவனங்கள் பங்கேற்கலாம். தேசிய விருதுடன், தனி நபருக்கு 1 லட்சம் ரூபாய் காசோலை, நிறுவனங்களுக்கு 2 லட்சம் ரூபாய் காசோலை, சான்றிதழும் வழங்கப்படும்.இதற்கான வழிகாட்டு நெறிமுறையை, www.narishaktipuraskar.wcd.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 2021, ஜன., 7ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X