கமுதி : கமுதி-சாயல்குடி சாலையில் புதுக்கோட்டை கருப்பணசாமி கோயில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிராம மக்கள் கூறியதாவது: செங்கப்படை, புதுக்கோட்டை, நெறிஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி உட்பட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் இப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைத்தால் மேலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பங்களில் வருமானம் இழந்து பெண்கள் சிரமப்படும் நிலை ஏற்படும்.எனவே புதுக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE