பணியை முழுமையா செய்யணும்கணபதிபுதுார், ஏழாவது வீதியில் சாக்கடை கால்வாயில் இருந்து, அப்புறப்படுத்தப்படும் கழிவு, வீடுகள் முன் குவிக்கப்படுகிறது. -ராஜன், கணபதிபுதுார்.
சிக்னல் அருகே சங்கடம்சரவணம்பட்டி பிரதான சாலையில், ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. சிக்னல் அருகில், இக்குழி இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.- ஆதவன், ஸ்ரீநகர்.
தொடர் விபத்துவாகன ஓட்டிகள் அவதிமாநகராட்சி, 59வது வார்டுக்கு உட்பட்ட, ஒண்டிப்புதுார், படக்கே கவுண்டர் வீதி 3ல், சாக்கடை கால்வாய் சிலாப்பில் உள்ள மூடி சிதிலமடைந்து, குழியாக உள்ளது.- ராஜேந்திரன், ஒண்டிப்புதுார்.
நாய் தொல்லை அதிகம்வெள்ளலுார், கணபதி கார்டன் பகுதியில், நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இவை சாலையில் செல்வோரை துரத்துவதால், மக்கள் அச்சப்படுகின்றனர்.- நாகராஜன், கென்னடி வீதி.
பணியை விரைந்து முடிக்கணும்அவிநாசி ரோடு, நவஇந்தியா - இந்துஸ்தான் கல்லுாரி செல்லும் சாலையில், போக்குவரத்து அதிகம் உள்ளது. இச்சாலையை சீரமைக்கும் பணி துவங்கி பல மாதங்களாகியும், இன்னும் நிறைவு பெறவில்லை.- சக்தி, பீளமேடு.
போக்குவரத்துக்கு இடையூறுநஞ்சுண்டாபுரம் - ராமநாதபுரம் ரோடு, திருவள்ளுவர் நகரில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- செல்வி, திருவள்ளுவர் நகர்.
சாக்கடை கால்வாய் அடைப்புதடாகம் ரோடு, இடையர்பாளையம், ஜெ.ஜெ.நகரில் சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ஐஸ்வர்யா, ஜெ.ஜெ.நகர்.
குப்பை அள்ளுவதில்லைதுடியலுார், ஐ.டி.ஐ., நகர் பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள, குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதன் அருகிலேயே குவிக்கப்படும் குப்பை, தீ வைத்து எரிக்கப்படுவதால், குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.- அனுஸ்ருதி, ஐ.டி.ஐ., நகர்.
வாகன ஓட்டிகள் அவதிவிளாங்குறிச்சி - சேரன்மாநகர் பிரதான ரோடு, சங்கரா மருத்துவமனை அருகில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- செந்தில்குமார், விநாயகபுரம்.
பாதியில் நிற்கிறது பணிஇருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, மகாகவி நகர், சிவசக்தி நகர், சண்முகானந்தா நகர் பகுதிகளில், சாலை புதுப்பிக்க பணி துவக்கப்பட்டு, சாலை முழுவதும் ஜல்லி கற்கள் நிரப்பியதுடன் பாதியில் நிற்கிறது. பணியை துவக்கி சாலையை சீரமைக்க வேண்டும்.- சக்திவேலு, இருகூர்.
மின் கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 100 வது வார்டுக்கு உட்பட்ட, போத்தனுார், மேட்டூர், கார்மேல் நகரில் உள்ள, மின்கம்பம் (எண்: 57) சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தை அகற்றிவிட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- சுல்தான், மேட்டூர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE