பொது செய்தி

தமிழ்நாடு

படைவீரர் கொடி நாள் வசூல் :ரூ.1.09 கோடி வசூலுக்கு இலக்கு

Added : டிச 08, 2020
Share
Advertisement
கோவை:படைவீரர் கொடி நாளான நேற்று, கலெக்டர் ராஜாமணி நிதி வசூல் செய்யும் பணியை, துவக்கிவைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: பொதுமக்கள் அச்சமின்றி வாழ இரவு, பகல் பாராமல் நாட்டை பாதுகாக்கும் படைவீரர்களின் தன்னலமற்ற தியாகத்தை பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் டிச., 7ம் தேதி கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. கொடிநாள் வாயிலாக திரட்டப்படும் நிதி, முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களை
 படைவீரர் கொடி நாள் வசூல் :ரூ.1.09 கோடி வசூலுக்கு இலக்கு

கோவை:படைவீரர் கொடி நாளான நேற்று, கலெக்டர் ராஜாமணி நிதி வசூல் செய்யும் பணியை, துவக்கிவைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: பொதுமக்கள் அச்சமின்றி வாழ இரவு, பகல் பாராமல் நாட்டை பாதுகாக்கும் படைவீரர்களின் தன்னலமற்ற தியாகத்தை பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் டிச., 7ம் தேதி கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.
கொடிநாள் வாயிலாக திரட்டப்படும் நிதி, முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கும், அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தவும், நிதி ஆதாரத்தை பெருக்கி அதன் மூலம் நலத்திட்டங்கள் வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. கோவையில் 2019ல், ரூ.1 கோடியே 59 லட்சத்து 8,500 நிதி வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கிட்டதை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்டது. 2020ல் இலக்காக, 1.09 கோடி ரூபாய் நிதி வசூல் இலக்கு அரசு நிர்ணயம் செய்துள்ளது. கடந்தாண்டு போன்றே, அரசு அலுவலர்கள், தொழில்நிறுவனங்கள், பொதுமக்கள், தாராளமாக படைவீரர் கொடி நாள் நிதி வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், முன்னாள் படை வீரர் நலத்துறை கண்காணிப்பாளர் இப்ராஹீம் ஷெரிப், மாவட்ட முன்னாள் படை வீரர் நல அமைப்பாளர் மல்லிகா அர்ஜூனா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X