பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் பெற்றோர் மரணம்...

Added : டிச 08, 2020
Share
Advertisement
கோவை:விபத்தில் பெற்றோரை இழந்து, இடுப்புக்கு கீழ் அனைத்து உறுப்புகளும் செயலிழந்துள்ள, தனது பேரனுக்கு உதவ கோரி, கோவை கல்லுக்குழி காந்திநகர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி எனும் மூதாட்டி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். 2018 மார்ச் மாதம் நடந்த விபத்தில், சிறுவன் கதிரேசனின் பெற்றோர், சம்பவ இடத்திலேயே இறந்தனர். சிறுவன் இடுப்புக்கு கீழ் செயல் இழந்து தாத்தா, பாட்டி

கோவை:விபத்தில் பெற்றோரை இழந்து, இடுப்புக்கு கீழ் அனைத்து உறுப்புகளும் செயலிழந்துள்ள, தனது பேரனுக்கு உதவ கோரி, கோவை கல்லுக்குழி காந்திநகர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி எனும் மூதாட்டி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். 2018 மார்ச் மாதம் நடந்த விபத்தில், சிறுவன் கதிரேசனின் பெற்றோர், சம்பவ இடத்திலேயே இறந்தனர். சிறுவன் இடுப்புக்கு கீழ் செயல் இழந்து தாத்தா, பாட்டி பராமரிப்பில் இருந்து வருகிறார். வயது முதிர்ந்த நிலையில், நிலையான வருமானம் இன்றி சிரமப்படுவதாகவும், உதவி கோரியும் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தார். சரஸ்வதி கூறியதாவது:ஐந்து வயதான பேரனின் உடல்நிலை காரணமாக, அவரை முழுவதும் கவனிக்க, ஒருவர் உடன் இருக்க வேண்டும். கணவர் கூலி வேலைக்கு சென்று, கிடைக்கும் வருமானத்தில் காலத்தை கடக்கிறோம். நிலையான வருமானம் இன்றி, பேரனின் மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியவில்லை.அவனது விபத்தில் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால், வீட்டு உரிமையாளர்கள் வீட்டை காலி செய்ய வலியுறுத்துகின்றனர். வீட்டை அடிக்கடி காலி செய்யவேண்டிய சூழல் எழுந்துள்ளது.குடிசை மாற்று வாரியத்தின் கீழ், ஓர் வீடு ஒதுக்கி தந்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பேரனின் மருத்துவ செலவுகளுக்கு, உதவவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.உதவ விரும்புவோர் சரஸ்வதி பாட்டியை, 96003 68424/ 96009 51697 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X