ராமநாதபுரம் மாவட்டம் தொளுவளூர், பாப்பக்குடி, இடையர்வலசை, சூரன்கோட்டை, கொந்தகை, நொச்சிவயல், கூரியூர், அச்சுந்தன்வயல், புத்தேந்தல் ஆகிய பகுதியில் வைகை ஆற்று பாசனம்பெரிய கண்மாய் கரை வழியில் 3500 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுதோறும் நெல் சாகுபடி நடக்கிறது.இவ்வாண்டு பருவ மழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் பெரியகண்மாய்க்கு நீர் வரத்து இன்றி இருந்தது.
அதேசமயம் மழையை நம்பி ஒருமாதத்திற்கு முன்பே நெல்சாகுபடி செய்துள்ளனர். இவர்களின்தேவைக்காக வைகை அணையிலிருந்து நவ., 30 முதல் டிச.5 வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
கடந்த டிச., 3ல் பார்த்திபனுார் வந்த வைகை தண்ணீர் 3000 கனஅடி தண்ணீர் பெரியகண்மாய் பாசனத்திற்காக வந்தது. இதன் மூலம் பெரிய கண்மாய்க்கு அரையடி அளவிற்கு தண்ணீர் வந்துஉள்ளது, இதுவும் பற்றாக்குறை தான் நெல்சாகுபடியில் எதிர்பார்த்த மகசூல் எடுப்பது சிரமம் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பெரிய கண்மாய் நீரினைபயன்படுத்துவோர் சங்கம் முன்னாள் தலைவர் பாலசுந்தரமூர்த்தி கூறியதாவது:பெரியகண்மாய் தண்ணீர் மூலம் 13 கிராமங்களில் நெல்சாகுபடி நடக்கிறது. இவ்வாண்டு நவம்பரில் எதிர்பார்த்த மழை இல்லை, புயல் காலத்திலும் எங்கள் பகுதியில் பெரியஅளவில் மழையில்லை. தற்போது நெற்பயிர் ஒருமாதத்தில் வளர்ந்துள்ளது, பெரியகண்மாயில் மொத்தமே மூன்று அடி தண்ணீர் தான் உள்ளது. இதில் இரண்டரைஅடி மழைநீரால் நிரம்பியது,
வைகை அணை தண்ணீரைமுறைப்படி வழங்கினால் 10 முதல் 15 நாள் தான் கிடைக்கும். நேற்றே காமன்கோட்டையில் மதகை அடைத்துவிட்டனர். ஆனால் நெற்பயிர் வளர இன்னும் 2 மாதம் வரை தண்ணீர் தேவையுள்ளது. ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். இவ்வாண்டு நெல்சாகுபடியில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE