பிள்ளையார்பட்டி: தொடர்மழையால் பிள்ளையார்பட்டி தேரோடும் வீதியில் உள்ள ரோடு முற்றிலும் குண்டும் குழியுமாகி பக்தர்களின் போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளையார்பட்டியில் புகழ்பெற்ற குடவரைக் கோயில் குன்றுடன் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள குன்றைச் சுற்றி ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் உள்ள தார் ரோடு உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி தேரோட்டம் இந்த ரோட்டில் தான் நடைபெறுகிறது.
இந்த ரோடு 16 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் சிறுசேமிப்பு நிதியின் கீழ் போடப்பட்டது.தற்போது முற்றிலுமாக பழுதடைந்துள்ள இந்த ரோட்டை பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட ரோடாக தரம் உயர்த்த வேண்டியது அவசியமாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE