சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் உயிர்ப்பலி கேட்கும் வகையில் ஆபத்தான பள்ளங்கள்நிறைந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாத அவலம் நீடிக்கிறது.
திண்டுக்கல் -காரைக்குடி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாறியபிறகு அதை அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.இச்சாலையில் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோர்ட் முன்பாக பெரிய பள்ளங்கள் பல மாதங்களாக உள்ளது. இப்பள்ளங்களை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை.
விபத்து ஏற்படும் போது மட்டும் ஒப்புக்காகஅந்த இடங்களில் கற்களை கொட்டி சரி செய்கின்றனர். ஆனால் அடுத்த நாளே மீண்டும் பள்ளங்கள் உருவாகிவிடுகிறது. தற்போது மழைக்காலம் துவங்கிய இரண்டே மாதங்களில் இப்பள்ளங்களில் 100 க்கும் மேற்பட்டோர் விழுந்து காயமடைந்துஉள்ளனர்.
அதிகாரிகள் சாலை விரிவாக்கப்பணி துவங்க இருப்பதை காரணம் காட்டியே பல மாதங்களாக இழுத்தடித்து வருகின்றனர். உயிர்ப்பலி ஏதும் ஏற்படுவதற்கு முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE