இளையான்குடி : இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் புயல் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முதல்வர் பழனிசாமிக்கும்,தமிழக அரசுக்கும் இளையான்குடி ஒன்றிய கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது.பி.டி.ஓ.,க்கள் பர்னபாஸ் அந்தோணி,ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் தனலெட்சுமி: புயல் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முதல்வர் பழனிசாமிக்கும்,தமிழக அரசுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். பி.டி.ஓ.,:தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சார்பில் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
கீர்த்தனா,ஒன்றிய கவுன்சிலர்:திருவள்ளூர் கிராமத்தில் குடிநீர் சரியாக வராததால் நீர் தேக்க தொட்டி கட்ட வேண்டும்.பி.டி.ஓ., குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.சண்முகம்,ஒன்றிய கவுன்சிலர்:புதுவலசை கிராமத்தில் குடிநீர் குழாய் இணைப்பிற்கு மின்இணைப்பு வழங்க மின்சார வாரியத்தினர் இழுத்தடித்து வருகின்றனர்.பி.டி.ஓ., மின்சார வாரிய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரகுடி கூட்டுறவு தலைவர் பாரதிராஜன் உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.மேலாளர் தவமணி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE